109
அருந்தலை யிரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந்தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
- புறம். 235
என்று தொடர்ந்து கூறுகின்றார். அவன் அரிய மார்பைப் பிளந்த வேல் பலரின் இதயத்தையும் பிளந்து விட்டது என்று கூறுவார் போல இக் கூற்றினை அமைக்கிறார். அவனால் புரக்கப்படும் சுற்றத்தினர் வாழ்விற் பொலிவிழந்து பையுள் எய்தும் காட்சியைப் ‘புரப்போர் புன்கண் பாவை சோர’ என்ற தொடரால் குறிப்பிடுகின்றார்.
உற்றவரை இழப்பதால் வரும் துன்பம் எதிர்பாராமல வருவதாகும். அதைப் போலவே பொருளாலும் வாழ்வு நிலையாலும் தாழ்வு உற்று நிலைகெடுவதும் எதிர்பாராமல் நிகழ்வதாகும். இத்தகைய நிலை பெரும்பாலும் உற்றவரையோ உறவினரையோ இழப்பதால் அதனை அடுத்து வரும் தொடர் நிகழ்ச்சியாக அமைகிறது. சீவக சிந்தாமணியில் இத்தகைய காட்சி ஒன்று புலவரால் காட்டப்படுகிறது. நாடிழந்தும், கணவனை இழந்தும் காடு சென்று தனித்து மகவைப் பெற்ற சச்சந்தனின் மனைவியான விசயமாதேவியின் நிலை இத்தாழ்வுநிலையைக் காட்டுகிறது. தன் கணவனை சச்சந்தன் கட்டியங்காரனின் சூழ்ச்சிக்கு ஆளாகி அதனால் வீழ்ச்சிக்கு இரையாகிறான். கட்டியங்காரன் தன் மீது போர் தொடுக்கிறான் என்ற செய்தியை உணர்ந்த சச்சந்தன் அதற்கு முன்னரே மயிற்பொறி ஒன்றில் அவளை ஏற்றி அனுப்பிவிடுகிறான். விண்ணளாவி விரைந்து செல்லும் மயிற்பொறியில் இருந்த விசயமாதேவி கட்டியங்காரனின் வெற்றி முழக்கம் கேட்டு மன்னவன் மாண்டு விட்டதை உணர்கிறாள். உடனே மயங்கி விசையை முடுக்க மாட்டாமல் செயலறுகிறாள்; விண்ணில் ஊரும்