பக்கம்:அணியும் மணியும்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூல் முகம்

இந்நூலில் 11 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கியத்தின் நயங்களையும், கருத்துகளையும், செய்திகளையும் சுருக்கித் தருகிறது. இலக்கியம் சிறப்படைவதற்கு அது உணர்த்தும் செய்திகள், அணிநயங்கள், உணர்வுகள், கற்பனைகள் காரணம் ஆகின்றன.

சங்க இலக்கியம் முதல் திரு.வி.க. வரை அவ்வவ் இலக்கியங்களின் தனிச் சிறப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் காட்டுகின்றன. ஒரு நூலில் பல சிறப்புகள் இருந்தாலும் அதற்கே உரிய அழகு நயம் எது என்று காட்டுவதில் இந்நூல் தனித் தன்மை பெற்றிருக்கிறது.எழிலும் எளிமையும் கூடிய செந்தமிழ் நடையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ரா. சீனிவாசன்