பக்கம்:அணியும் மணியும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

7. கவியும் கவிஞனும்


மிழுக்கு அணிசெய்யும் காவியங்கள் ஐந்தனை மட்டும் ஐம்பெருங் காவியங்கள் எனச் சிறப்பித்துக் கூறுவர். அவற்றுள் சிந்தாமணியும் ஒன்றாகும். இது காவிய நலன்கள் கவின் செய்யக் காதலும் வீரமும் மிடைந்து வர ஒன்பான் சுவையும் ஒன்றி நிலைக்கக் கற்போரின் கருத்தையும் உள்ளத்தையும் கவரும் கற்பனைன கலந்த இலக்கியமெனினும், மக்கட்கு அறிவு புகட்டும் திறம் இந்நூலுள் ஆங்காங்கு அழகுபட அமைந்துள்ளது.

கவியை இயற்றும் கவிஞன் சுவையும் அணியும் அமையக் காவியம் இயற்றினாலும், உலகுக்கு அறிவு புகட்டவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமும் அவன் பால் அமைந்து கிடக்கிறது. அவன் வெறுஞ் செய்யுள் மட்டும் இயற்றும் புலவனாக இல்லாமல் அறிவுகொளுத்தும் ஆசானாகவும் அமைகிறான். அவன் அறிவுரை சொல்லும்பொழுது அவன் சொந்த இயல்பு வெளிப்பட்டு அவனுடைய ஆழ்ந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும் வெளிப்படுகின்றன.

கவிஞன் தன், கொள்கைகளையும், உணர்த்த விரும்பும் நீதியையும் நேரே எடுத்துச் சொன்னால் அவற்றை அடுத்துக் கேட்பார் யாரும் இரார். அதனால் அருந்தக் கொடுக்கும் மருந்தை இனிப்பில் கலந்து இன்சுவை ஊட்டிக் கொடுக்கும் மருத்துவனைப் போலக் கசக்கும். உண்மைகளை இனிக்கும் காவியச் சுவையில் இசைத்து, மனத்தில் நிலைபெறுமாறு செய்து,