18
தென்சென்னை மாவட்டத்திற்கு ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது. இன்று கொடுத்ததோடு சேர்த்து ஒரு கோடியே 61 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது. கொடுத்தது ஒரு கோடியே 52 லட்சம். கோவை மாவட்டத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கொடுத்தது ஒரு கோடியே 80 லட்சம். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. கொடுத்தது இரண்டு கோடியே இரண்டு லட்சம் ரூபாய். சேலம் மாவட்டம் - ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப் பட்டது. அவர்கள்தான் அதிகத் தொகையாக இரண்டு கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். புதுவை மாநிலம் 11 லட்ச ரூபாய். சில்லறையாக என்னிடத்திலும், துணைப் பொதுச் செயலாளர் தம்பி ஸ்டாலினிடத்திலும் கொடுத்த தொகை 15 லட்சம் ரூபாய். எல்லாவற்றையும் சேர்த்தால், இதுவரையில் மொத்தம் சேர்ந்த நிதி 30 கோடியே ஐம்பதாயிரம் ரூபாய். இந்த கணக்கு விபரத்தை நான் படித்ததற்கு காரணம் பாக்கி வைத்திருப்பவர்கள், பாக்கியை வழங்கி விடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தானே தவிர, வேறல்ல. நான் முதலிலே காவல்துறையைப் பற்றி குறைபட்டுக் கொண்டேன். அவர்களுக்கு என்ன கோபமோ தி.மு.கழகத்தின் மீது தெரியவில்லை. இன்றைக்கு