பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

நான் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகள், நண்பர்கள் எல்லாம் தி.மு.கழக ஆட்சியிலே காவல்துறைக்கு என்னென்ன நன்மைகள் செய்யப்பட்டன என்பதை அறியாதவர்கள். ஏனென்றால், தி.மு.க. 67ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலே ஆட்சிக்கு வந்து 69ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகி போலீஸ் அமைச்சராகவும் இருந்தபோதுதான், முதன்முதலாக காவல்துறை நண்பர்களுடைய கவலையைப் போக்க என்ன செய்யலாம் என்று எண்ணிப் பார்த்து, அவர்களுடைய குறைகளை, கோரிக்கைகளை நிறைவேற்ற ஒரு குழு கோபாலசாமி ஐ.சி.எஸ். (ஓய்வு) தலைமையில் முதல் போலீஸ் கமிஷனை அமைத்தேன். இந்தியாவிலேயே போலீஸ்காரர்களுடைய குறை தீர்க்க முதன்முதலாக போலீஸ் கமிஷன் அமைத்தது தமிழ்நாடுதான். தி.மு.கழக ஆட்சிதான். அவர் ஐ.சி.எஸ். அதிகாரி. ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்ல. ஐ.ஏ.எஸ். என்றால் இப்பொழுது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஐ.ஏ.எஸ். என்றால் இந்தியன் அட்மினிஸ்டிரேட்டிவ் சர்விஸ் என்பார்கள். ஆனால், இப்போது ஐ.ஏ.எஸ். என்றால், "இந்தியன் அம்மா சர்விஸ்" என்று அர்த்தம். அப்படியும் சில பேர் அந்த சர்விசில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த மாநாட்டில் உட்காருவதற்கு மணல் போட எண்ணி, நூறு வண்டி மணல் போட வேண்டுமென்று பொன்முடி மாவட்ட அதிகாரிகளை பார்த்துக் கேட்டார். மறுப்பு. மாநாட்டுப் பேரணிக்கு அனுமதி கேட்டார். அனுமதி மறுப்பு. கேடுகள் எல்லாம் நல்லவைகளாக மாறும் என்பதற்கேற்ப மணல் கிடைக்காத காரணத்தால், பிளாஸ்டிக் துணிகளை ஆங்காங்கு பரப்பி, அதிலே நீங்கள் அமர்ந்திருக்கும் காட்சியை காணுகிறேன். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட அதிகாரிகளும், ஐ.பி.எஸ்.