20
அதிகாரிகளும் தி.மு.கழக ஆட்சிக்கு ஏன் தங்களை விரோதிகளாக கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. 69-ஆம் ஆண்டு போலீஸ்காரர்களுக்காக போலீஸ் கமிஷன் அமைத்த ஆட்சி தி.மு.கழக ஆட்சி. அந்தக் கமிஷன் உறுப்பினர்கள் 133 பரிந்துரைகளைச் செய்தார்கள். பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக அதனுடைய 115 ஆட்சி. அதுவரையிலே போலீஸ்காரர்களுக்கு ஒரு கான்ஸ்டபிளுக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா ? 90 ரூபாய். "90 ரூபாயை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன பண்ணுவது ?" என்று கண்ணீர்விட்டார்கள். அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் இந்தக் கமிஷன் போடப்பட்டது. 90 ரூபாயாக இருந்த மாத சம்பளத்தை, முதன்முதலாக 275 ரூபாய் என்று ஆக்கியவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை இந்தியாவிலே இருக்கின்ற எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள். 275 ரூபாயாக உயர்த்தப்பட்ட கான்ஸ்டபிள்களின் சம்பளம் இன்றைக்கு வளர்ந்து வளர்ந்து 00, 3000 ரூபாய் என்ற அளவிற்குப் போய் நிற்கிறது என்பதை, அன்றைக்கு கான்ஸ்டபிளாக இருந்தவர்கள் இன்றைக்கு ஓய்வு பெற்றிருப்பார்கள். இன்றைக்கு வந்திருக்கின்ற எல்லாம் புதியவர்கள். அவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் நம்மை அடிக்க கம்பை ஓங்குகிறார்கள், அடிக்கிறார்கள். அடிக்கட்டும். வன்முறையைத் தடுக்க கம்பைப் பயன்படுத்துங்கள். பலாத்காரத்தை நிறுத்த தீவிரவாதத்தைத்