பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஆட்சியில் இரண்டாம் நிலைக் காவலருக்கு 825 ரூபாய் சம்பளம். தி.மு.க. ஆட்சியில் அதே காவலருக்கு 2,750 ரூபாய். முதல் நிலைக் காவலருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 950 ரூபாய்.தி.மு.க. ஆட்சியில் 3,200 ரூபாய். தலைமைக்காவலருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 1,200 ரூபாய்.தி.மு.க ஆட்சியில் 4,000 ரூபாய். சப்-இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா ஆட்சியில் 1,600 ரூபாய். தி.மு.க. ஆட்சியில் 5,300 ரூபாய். இதனால் சில சப்-இன்ஸ்பெக்டருக்கு எங்கள் மேல் மேல் கோபம் இருக்கலாம். "5,000 ரூபாயோடு நிறுத்தியிருக்கலாம். இப்போது எங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாமல் போய்விட்டது. நீங்கள் 5,300 ரூபாய் கொடுத்தது தப்பாகிவிட்டது” என்று அந்தக் கோபம் இருந்தால் சொல்லுங்கள், ஒத்துக்கொள்கிறேன். ஆக, சப்-இன்ஸ்பெக்டருக்கு 1,600 ரூபாயாக இருந்ததை 5,300 ரூபாயாக ஆக்கினோமே, அதற்காக கோபமா? எஸ்.பி.க்கு 3,700 ரூபாயாக இருந்ததை 12,000 ரூபாயாக ஆக்கியவன்தான் இந்தக் கருணாநிதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். போலீஸ் நண்பர்களே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். சிறப்புப்படி 20 ரூபாய் என்று இருந்ததை 40 ரூபாயாக மாற்றினோம். சீருடைப்படி 25 ரூபாயாக இருந்ததை 50 ரூபாயாக மாற்றினோம். ரிஸ்க் படி 20 ரூபாயாக இருந்ததை 60 ரூபாயாக மாற்றினோம். போலீஸ்காரர்களுக்கு வீடு கட்ட 48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதை 190 கோடியாக அதிகப்படுத்தி ஒதுக்கியது தி.மு.கழக ஆட்சி.