பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

நாடுகளிலும் ஆட்சி மொழியாக இருக்கின்றது.


அதைப் போல இந்தியாவிலும் தமிழ் மத்திய ஆட்சி மொழிகளிலே ஒன்றாக இருக்க வேண்டும். நான் சொன்ன தகுதிகள் எல்லாம் இருக்கின்ற காரணத்தால் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற செம்மொழியாகவும் தீர்மானத்தை வலியுறுத்துகிறேன். அடுத்த தீர்மானம், இந்தியப் பிரதமரால் நாடாளு மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தியும்; னால், இந்தத் தீர்மானம் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமேயானா இலங்கையைச் சுற்றிக் கொண்டு 700 கிலோ மீட்டருக்கு மேல் போக வேண்டிய தேவையற்ற பயணம் இருக்காது. சுலபமாக செல்லவும், அதன் காரணமாக வர்த்தகம் பெருகவும், தமிழகத்தின் பொருளாதார வளம் செழிக்கவும் இது மூல காரணமாக விளங்கும். எனவே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவது இந்தத் தீர்மானம். நான்காவது தீர்மானம், மத்திய அரசு நாடாளுமன்றத்திலே அளித்துள்ள வாக்குறுதிக்கு மதிப்பளிக்காமல், மாநில அ.தி.மு.க. அரசு தனது பழிவாங்கும் அரசியலுக்கு பொடா சட்டத்தைப் பயன்படுத்தும் போக்கை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அந்தச் சட்டத்தையே மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்தத் தீர்மானத்திற்கு உங்கள் கையொலி மூலமாக ஆதரவு