பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

தி.மு.க. ஆட்சியில் தொடங்கி 13 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், உழவர் சந்தை, பெரியார் நினைவு சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம் போன்ற தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்து வரும் ஜெயலலிதா அரசைக் கண்டிப்பதுடன் மீண்டும் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும்; தற்போது தேர்தல் வரப்போகிறது என்பதற்காக மீண்டும் இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். இலவச வேட்டி சேலை இனிமேல் கிடையாது, நிதிப் பற்றாக்குறை என்று சொல்லி அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, இப்போது மீண்டும் இலவச வேட்டி சேலை வழங்கப் போவதாகச் சொல்கிறார்கள். திடீரென்று இந்த அம்மையார் சத்துணவில் முட்டை போட்டாலும் போடுவார்கள். தி.மு.கழக ஆட்சியில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. அந்த முட்டைகள் வழங்குவதை நிறுத்தி விட்டு, நிதி பற்றாக்குறை, பணம் இல்லை என்று கைவிரித்தார்கள். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. அதையும் அதிமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். ஏழைப் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் திருமண உதவித் திட்டத்தின் பெயரால் தி.மு.க. ஆட்சியில் தரப்பட்டது. 2 லட்சத்து 90 ஆயிரம் ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தின்கீழ் பணம் வழங்கப்பட்டது. அந்தத்