43
மட்டத்திலும் ஊழல், லஞ்சம் அன்றாட நிகழ்வாகி விட்டதற்கு எடுத்துக் காட்டாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வழங்கும் நிதி ஒதுக்கீட்டுப் பணிகள் உட்பட அனைத்துத் துறை பணிகளிலும் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதில் 'பேக்கேஜ் டெண்டர்' (Package Tender) என்ற பெயரால் கமிஷன்; ஆளுங்கட்சிக்காரர்களால் பகிரங்கமாக நடத்தப் படும் மணல் திருட்டு; வறட்சி நிவாரணம் எனும் பெயரால் அரசு பணத்தை ஆளுங்கட்சியினர் பங்கிட்டுக் கொள்ளும் பகல் கொள்ளை போன்ற ஊழல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தியும்; அடுத்த தீர்மானம் - பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் ஆரம்பக் கல்வியில் தொடங்கி தலைவர் கலைஞர் காலத்தில் கல்லூரி கல்வி வரை வழங்கப்பட்டு வந்த கல்விச் சலுகைகளை ஒழித்துக் கட்டி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்கள் கல்வி பெற முடியாத அளவிற்கு கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்வு, இலவச பஸ் பாஸ் சலுகை ஒழிப்பு போன்ற அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிப்பதோடு இவ்வறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வற்புறுத்துகிறோம். உதாரணமாக மருத்துவ படிப்பிற்கு எம்.பி.பி.எஸ். படிக்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு கட்டணம் 10 ஆயிரம் ரூபாய். இப்போது அது 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நம்ப வீட்டுப் பிள்ளைகள் படிக்க முடியுமா? பல் டாக்டர் படிக்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆண்டுக் கட்டணம் 7500 ரூபாய். இப்போது 55 ஆயிரம்