பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

ரூபாய். பி.பார்ம். படிக்க தி.மு.க. ஆட்சியில் 5000 ரூபாய். இப்போது 22 ஆயிரம் ரூபாய். பி.எஸ்ஸி., நர்சிங் படிக்க தி.மு.க. ஆட்சியில் 6000 ரூபாய். இப்போது 25 ஆயிரம் ரூபாய். இதையெல்லாம் மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்பது தான் இந்தத் தீர்மானத்தின் நோக்கம். அடுத்த தீர்மானம். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் நெல் பயிரிடும் விவசாயிகள், கரும்பு பயிரிடும் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகள் அரசுக்கு முன் குவிந்து கிடக்கும்போது, முதல் அமைச்சர் ஜெயலலிதா அரசு நிகழ்ச்சி என்ற பெயரால் சுய விளம்பரத்திற்காகவும் எதிர்க்கட்சிகளின் மீது பொய்ப் பிரச்சாரம் செய்யவும், ஊதாரித்தனமாக மக்களின் வரிப் பணத்தை செலவிடுவதைக் கண்டிப்பதுடன், எந்தவித முகாந்திரமும் இன்றி ஏதோ முக்கியமான அத்யாவசிய காரியம் போல கண்ணகி சிலை, சீரணி அரங்கம் ஆகியவற்றை இரவோடு இரவாக அகற்றியதோடு நிதிப் பற்றாக்குறை எனக்கூறிக் கொண்டே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை பொருத்தமற்ற இடத்தில் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் நிலையில் அமைத்திட எத்தனிக்கும் ஜெயலலிதா அரசின் தான்தோன்றி தர்பாரைக் கண்டிப்பதோடு அந்த முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தியும்; மத்திய அரசு கரும்புக்கு கட்டாய குறைந்த பட்ச அடிப்படை விலையாக டன் ஒன்றுக்கு 695 ரூபாய் என்று