பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

- இந்த இயக்கம் என்பதற்கு அடையாளமாக சின்னசேலம் வாசுதேவன், கச்சிராப்பாளையம் மாரியப்பன், வடக்கனந்தல் நெடுமாறன், அரசம்பட்டு முத்தையன், விழுப்புரம் கோபால், திண்டிவனம் மிசா துரை, மேல்மலையனூர் பவுணன், சிதம்பரம் துரை.கிருஷ்ணமூர்த்தி, கெடார் பாண்டுரங்கன் ஆகியோரது பெயர்களால் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இன்னும் சிலருடைய பெயர்கள் விட்டுப்போயிருக்கலாம். ஒன்றாக இருந்த தென்னார்க்காடு மாவட்டத்தில் திராவிட இயக்கம் வளர்த்த, திராவிட முன்னேற்றக் கழகம் வளர்த்த இரண்டு மாவீரர்களுடைய பெயர்கள் தோரண வாயிலுக்கோ, முகப்புக்கோ வைக்கப்படாவிட்டாலும்கூட, அவைகள் எல்லாம் ஏற்கனவே பல மாநாடுகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் என்ற காரணத்தால், அவைகள் தோரண வாயில்களாக நம்முடைய இதயத்துக்குள்ளேயே விளங்குகின்றன என்ற வகையில் கடலூர் இளம்வழுதி அவர்களுடைய பெயரையும், ஏ.கோவிந்தசாமி அவர்களுடைய பெயரையும் நான் இந்த நிறைவுரையாற்றுகின்ற நேரத்திலே நினைவுகூர்வது எனக்குப் பெருமை என்று கருதுகின்றேன். இந்த மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெற உழைத்த வரவேற்புக்குழுத் தலைவர் தம்பி பொன்முடி, உள்ளபடியே இன்றைக்குத்தான் பொன்முடி ஆகியிருக்கிறார். தேர்தல் நேரத்திலே, அவரை என்னிடமும், பொதுச்செயலாளரிடமும் அறிமுகப்படுத்தியபோது, "இவர் திராவிட இயக்கத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆசிரியர் போராட்டத்திலே கலந்துகொண்டு, 4 மாதமோ, ஒரு