பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அந்த ஆதாயம் எனக்கும், பொதுச் செயலாளருக்கும், பொருளாளருக்கும், தலைமைக்கழகத்திற்கும் கிடைக்கின்ற ஆதாயமாகும். இருந்தாலும்கூட, இந்த மாநாட்டு விவகாரத்திலே பொன்முடியும், வீரபாண்டி ஆறுமுகமும் போட்டி போட்டுக் கொள்ளும்போது, எனக்கு இரண்டு பொண்டாட்டிக்காரன் நினைவுதான் வந்தது. அனுபவத்தின் காரணமாக! ஒருவரைப் பாராட்டினால், ஒருவருக்கு கோபம் வருவது இயல்பு. ஆனால், கணவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இரண்டு பேரும் சமம்தான். அவனது மனைவி களுக்குள் வேண்டுமானால் போட்டி மனப்பான்மை இருக்கலாம். அதை நான் பொறாமை மனப்பான்மை என்று சொல்லமாட்டேன். "இன்றைக்கு சமையல் பிரமாதம்" என்று சொல்லிவிட்டு, "சமைத்தது யார்" என்று கேட்டால், சமைத்தது இரண்டு பேரில் ஒருவர் என்றால், சமையல் பிரமாதம் என்று சொன்னால், இன்னொருவரை சமாதானப்படுத்துவதற்கு, "நாளைக்குப் பார். இதைவிட பிரமாதமாக அவள் சமைப்பாள், சாம்பாரும், ரசமும்" என்று சொன்னால் தான் அவன் தப்புவான். அதைப்போல, இன்றைக்கு பிரமாதம் என்று சொல்லப்படுகிற சமையல், நாளைக்கு இவர்களாலே இதைவிட பிரமாதமாக ஆக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு இன்னொரு சிறப்பு - வீரபாண்டி ஆறுமுகம் இங்கு குறிப்பிட்டதைப் போல், ஏறத்தாழ 45 பேருக்கு தலைப்புகளில் உரையாற்ற வாய்ப்பு தரப்பட்டது. அதில் நிர்மலா சுரேஷ் ஒருவர்தான் அவசர வேலை