பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 Ü அணுக்கரு பெளதிகம் வது ஒரு வழியில் நீக்காத வரையில், குறைந்த வேகத்தைக் கொண்ட துகள்கள் உண்டாதல் ஆற்றல் விதிக்கு முரணுடை யதாகின்றது. இது பாலியின் கொள்கைக்கு, அஃதாவது ஒவ் வொரு பீட்டாத் துகளுடனும் மற்ருெரு துகளும் ஆற்றல் வேற்றுமையைச் சுமந்துகொண்டு உட்கருவினின்றும் வெளி யேறுகின்றது என்ற உண்மைக்கு, நம்மைக் கொண்டுசெல்லு கின்றது. இந்த ஆற்றலின் மொத்தக் கூடுதல் எப்பொழுதும் மாருத நிலையில் உள்ளது. திட்டமான புள்ளிவிவர இயல் பற்றிய விதிகளுக்கிணங்க இந்த மொத்தக் கூடுதலான ஆற் றல் பீட்டாத் துகளாலும் இந்தப் புதிய துகளாலும் பகிர்ந்து கொள்ளப்பெறுகின்றது. புதிய துகள் : இந்தப் புதிய துகள் எவ்வித மின்னூட்டமுமின்றி இருத் தல் வேண்டும்; இல்லாவிட்டால் ஒரு பீட்டாக் கதிர்வீசல் நிகழும்பொழுது மின்னுாட்டம் ஒர் அலகு அதிகரிக்கின்றது என்ற உண்மையை விளக்குவது-ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பெற்றது. இது-இயலாது போய்விடும். இந்தத் துகள் முகில் அறையில் புலளுவ தில்லை என்ற உண்மையாலும், இந்தப் புதிய துகளில் ஒருவித மின்னூட்டமும் இல்லை என்பது உணர்த்தப்பெறுகின்றது. இந்தப் புதிய துகள் மின்சாரச் சமனிலையில் இருப்பதாலும், அதன் பொருண்மை நிச்சயமாக மிகச் சிறியதாக இருப்பத்ா லும் அது நியூட்ரினே (Neutrino) என்று வழங்கப்பெறுகின் றது. இதுகாறும் மேற்கொள்ளப்பெற்ற ஒவ்வொரு சோதனை யின் முடிவின்படியும், நியூட்ரினுேவின் பொருண்மை எலக்ட் ராணின் பொருண்மையைவிட மிகச் சிறிதே என்று தெரிகின் றது. ஆனல், அஃது உண்மையில் ஃபோட்டானின் அசையா நிலைப்பொருண்மையைப் போலவே (Rest mass) 0 ஆக உள்ளதா என்பதை இன்னும் உறுதியாகக் கூறுவதற்கில்லை.