பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் & # (II) செயற்கைமுறை அணுக்கரு மாற்றங்கள். ரதர்ஃபோர்டின் சோதனைகள் : அணுக்கள் அவற்றின் உட்கருக்களின் பண்புகளுக்குகுறிப் புக்களாக (Clues) அமைந்துள்ளன என்பதை நாம் விவரமாக எடுத்துரைத்தோம். இனி,வெளித் தலையீட்டின்மூலம் உட்கரு வினைப்பற்றிச் சரியானதும் விவரமானதுமான தகவலை அறிவ தற்காக மேற்கொள்ளப்பெறும் சோதனைகளை ஆராய்வோம். மேலும்,ரதர்ஃபோர்டு என்பார்தான் இத்துறையிலும் முதல் முயற்சியை மேற்கொண்டார். அவர் செய்கை முறையில் ஒர் அணுவைப் பிறிதோர் அணுவாக மாற்றம் அடையச் செய்வதற்குரிய-ஆல்பாத் துகள்களைக்கொண்டு அணுக் களைத் தாக்குவதற்குரிய-சரியான கருவியைக் கண்டு பிடித் தார். 1919-இல் இம்முறையால் ஒரு தனிமத்தை மாற்றம் அடையச் செய்தார்: நைட்ரஜனை ஆக்ஸிஜனுக மாற்றினர். ஆளுல், முக்கியமான பண்புகளே மாற்றுவதற்குரிய வழியை இம்முன்ற தந்துவிட்டது என்று நாம் கருதக்கூடாது. ஒரு சில அணுக்களில்மட்டிலும்தான் இம்மாற்றம் நடைபெற் றது. ஆனல், இஃது இக்கண்டுபிடிப்பின் அடிப்படை முக்கி யத்துவத்தைக் தவருகச் செய்கின்றதில்லை. ஆல்பாக்கதிர்களைக்கொண்டு நைட்ரஜன் அணுக்கள் தாக்கப்பெறுங்கால் நேர்மின்னுாட்டம் பெற்ற ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்ட-ஹைட்ரஜன் உட்கருக்கள்-ஒரு வகைக் கதிர்வீசல் வெளிவிடப்பெற்றகை ரதர்ஃபோர்டு கண்டார். ஒரு ஹைட்ரஜன் அணுவின் உட்கரு ஓர் அடிப் படைத் துகள்: நாம் பின்னல் காண்பதைப்போல், அதுஇந்தக் காரணத்திற்காகவே-சடப்பொருளின் மிக முக்கிய மான அடிப்படைத் துகள்களில் ஒன்ருகும். ஆகவே, அது புரோட்டான் (Proton) என்ற பெயரிடப்பெற்றுள்ளது. ஹைட்ரஜன் அணுக்கள் ஆல்பாத்துகள்களால்-அஃதாவது ஹீலிய அணுக்கருக்களால்-தாக்கப்பெறுங்கால் சில சமயம் அ-6