பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அணுக்கரு பெளதிகம் ஹைட்ரஜன் அணுக் கருவிலிருந்து ஒரு புரோட்டான் வெளி விடப்பெறுகின்றது. ஆல்பாத் துகள் அணுக்கருவிலேயே தங்கிவிடுகின்றது. இத்தகைய சந்தர்ப்பத்தில் அணுக்கரு விற்கு என்ன நேடுகின்றது என்பதைக் கணக்கிடுவதற்கு பொருண்மை அழியா விதியும், ஆற்றல் அழியா விதியும் நமக் குத் துணையாக அமைகின்றன. நைட்ரஜன் அணுக்கருவின் .ெ பா ரு ண் ைம - எ ண் 14: அ த ன் மின்னுரட்ட-எண் (அணு-எண்) 7. ஆகவே, அதன் குறியீடு, N'. ஆல்பாத் துகளின் பொருண்மை-எண்ணும் மின்னூட்ட-எண்ணும் ஏற் கெனவே குறிப்பிட்டது போல் முறையே 4ம் 2ம் ஆகும். அதன் குறியீடு, H". புரோட்டானின் குறியீடு, H'; பொருண்மையைப் பொறுத்தவரையில், ஓர் ஆல்பாத்துகள் உறிஞ்சப்பெற்றதாலும் ஒரு புரோட்டான் இழக்கப்பெற்ற தாலும் நைட்ரஜன் அணுக்கரு அடியிற் கண்டவாறு மாற்றம் அடைகின்றது. 14-H 4 — 1 = 1 7 ஆளுல், அதன் மின்னூட்டத்தைப் பொறுத்தவரையில் கீழ்க் கண்ட சமன்பாடு பொருந்துகின்றது : - 7 -- 2 - 1 = 8. எனவே, பொருண்மை 17-உம் அணுககரு மின்னூட்டம் (அணு-எண்)8-உம் கொண்ட ஓர் அணுக்கரு உண்டாகின்றது. இந்த அணுக்கரு மின்னூட்ட-எண், அஃது ஒர் ஆக்ஸிஜன் அணு என்று உணர்த்துகின்றது; ஆனால், பொருண்மை-எண் 17 சாதாரணமான ஆக்ஸிஜன் அணுவின் பொருண்மை-எண் ணுடன் ஒத்ததாக இல்லை; ஆ க் விஜன் அணுவின் பொருண்மை-எண் 16. உண்மை என்னவெனில், இஃது ஆக்ஸிஜனின் அரியதோர் ஐசோடோப்பு (Isotope) ஆகும். இத்தகைய ஐசோடோப்புக்களைப்பற்றி பின்னர் ஆராய் வோம். N' என்ற நைட்ரஜன் 0' என்ற ஆக்ஸிஜனுக அடைந்த மாற்றம்தான் தனிமங்களின் செயற்கை முறை மாற்றத்தின் பெயர்பெற்ற முதல் எடுத்துக்காட்டாகும்.