பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 9 | வழிகாட்டிகளாக உள்ள பண்புகள் : இந்த அடிப்படைத் துகள்களைப்பற்றிய நம் ஆராய்ச்சி யில், அணுக்கருக்களின் உண்மையான அடிப்படைத் துகள் கள் எவை என்பதற்கும், வேறு விதத்தில் எவை பங்கு பெறு கின்றன என்பதற்கும் வழிகாட்டிகளாக இருக்கக்கூடிய பண்பு களே நாம் கவனித்து நோக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு துகள் அணுக்கருவிலிருந்து கிளம்புகின்றது என்ற மெய்ம் மையினால் அத் துகள் அந்த அணுக்கருவின் இறுதியான, அடிப் படைப் பகுதிப் பொருள் என்று சான்முகக் கொள்ள முடி யாது. அணுக்கருவின் புறத்தமைப்பைப்பற்றிய எளிய ஆராய்ச்சிேைலயே, இது சான்ருக அமைகின்றது. அணுக் கருவின் புறத்தமைப்பு எலக்ட்ரான்களாலானது. எனினும், சில சமயம் அதிலிருந்து வேறு துகள்களும்-அஃதாவது ஃபோட்டான்களும்-கிளம்புகின்றன. ஆல்ை, அணுக்கரு வின் புறத்தமைப்பில் குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழும் பொழுதுதான் இவை தோன்றுவதால், இவை அந்த அமைப் பின் முழுமையானப் பகுதிப்பொருள்கள் என்று குறிப்பிட் டுக் காட்டப்பெறுவதில்லை. எனவே, அணுக்கருவின் புறத் தமைப்பிலுள்ள துகள்களுக்கும்-இவற்றைத்தான் நாம் அத னுடைய உண்மையான பகுதிப்பொருள் எனக்குறிப்பிடுகின் ருேம்-அதனுள் சிலசமயம் நிலைமாற்றங்களின் காரணமா உண்டாகி உடனே வெளிவரும் துகள்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் நாம் காண்கின்ருேம். அணுக்கருவின் புறத்த மைப்பைப் பொறுத்தமட்டிலும் முன்னவை எலக்ட்ரான் களாகும்: பின்னவை ஃபோட்டான்களாகும். ஒரு குறிப் பிட்ட முறையில், நாம் அணுக்கருவின் புறத்தமைப்பில் ஏற் கெனவே ஃபோட்டான்கள் இருந்தன என்று கூடக் கூறலாம். ஏனெனில், எலக்ட்ரான் கூடுகளுக்குகிடையிலுள்ள இடம் வெறுமையாக இருந்தபோதிலும் (சிறிதுகூட எந்தவித சங் கடமுமின்றி விரைவான துகள்கள் அதனைத் துளைத்துச் செல் லக்கூடும்), அஃது ஏதோ ஒன்றினை-மின்புலத்தைக்-கொண் டுள்ளது; ஓர் ஒப்புடைமையைக் (Analogy) கையாண்டால்,