பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 97 டாவதாக, அவை ஒர் உட்கருப்புலத்தின் மூலம் இன்னும் கண்டறியப்பெருத ஒரு முறையில் உட்கருவின் உட்புற essiv soudů L3&Mrs? föG (Internal cohesion) 2-piĝurs sysoud கின்றன. காமாக்கதிர் ஃபோட்டான்கள் வெளிப்படுவதற்கு மின்புலம் காரணமாக உள்ளது: எலக்ட்ரான்களும் பாசிட் ரான்களும் நியூட்ரிளுேக்களும் வெளிப்படுவதற்கு அணுக் கருப்புலம் காரணமாகவுள்ளது. அணுக்கருப் புலத்திற்கும் அதனுடன் இங்கு உறவு கொண்டுள்ள துகள்களுக்கும் உள்ள தொடர்பு, மின்புலத் திற்கும் ஃபோட்டான்களுக்கும் இடையேயுள்ள தொடர் பைப்போல் அவ்வளவு எளிதாக உள்ளதா என்பதில் ஐயப் பாடுதான் உள்ளது. இந்த உறவுமுறை மிகச் சிக்கலானது என்பது போக போகத் தெரியவரும். ஆல்ை, பொதுவாகப் பேசுமிடத்து, மேற்குறிப்பிட்ட ஒப்பீட்டை மேற்கொள்வது உகந்ததே. எனவே, அணுக்கருவினைப்பற்றி ஒரளவு தெளிவான கருத்தினைப் பெற்று விட்டோம். மிக்க ஆற்றல் வாய்ந்த மிக உயர்ந்த நுண்-பெருக்கியொன்று நாம் மேலே விவரித்தவாறு அணுக்கருக்கள் அமைந்துள்ளன என்பதாகக்-அஃதாவது, அவை புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் பகுதிப் பொருள்களாகக் கொண்டுள்ளன என்று-காட்டும் என்று அதற்கு விளக்கம் தரலாம். ஆகவே, ஒவ்வொரு அணுக்கரு வினையும் மிக எளிதானமுறையில் அதன் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் நியூட்ரான்களின் எண்ணிக்கையையும் கொண்டே இனங்கண்டு கொள்ள முடியும். அணுக்கருவின் பொருண்மை : ஒர் அணுக்கருவின் பொருண்மை அதனுடைய புரோட் டான்களின் பொருண்மையும் நியூட்ரான்களின் பொருண் மையும் சேர்ந்த கூட்டுத்தொகைக்குச் சரியாக இருக்கின்றது. அ-7