பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 அணுக்கரு பெளதிகம் எழுதிக் காட்டலாம். இதுதான் 'பளுவான ஹைட்ரஜன்" (Heavy hydrogen) என்று வழங்குவது. பின்னர் மூன்ருவது வகை ஹைட்ரஜன் கண்டறியப்பெற்றது; அதன் அணுக்கரு வில் ஒரு புரோட்டானும் 2 நியூட்ரான்களும் அடங்கியுள் ளன. அது ட்ரைட்டியம் (Tritium) என்று வழங்கப்பெறு கின்றது; அதன் அணுக்கரு ட்ரைட்டான் (Triton)என்று குறிப் பிடப்பெறுகின்றது. அதன் குறியீடு T அல்லது H என் பது. இந்த அணுக்கரு நிலையானதன்று; அது நீண்ட அரைவாழ்வு கொண்ட (கிட்டத்தட்ட 31 யாண்டுகள்) கதிரியக்க முள்ள பொருள்: அஃது எலக்ட்ரான்களை வெளிவிடும் இயல் புடையது. ஆகவே, ட்ரைட்டியம் இயற்கையில் கிடைப்ப தில்லை; ஆனால், அஃது அணுக்கருமாற்றச் செயல்களில் உண் டாகும் விளைபொருளாகும். ஹீலிய அணுக்கரு : அடுத்த எளிய தனிமம் ஹீலியம் (Helium) என்பது: அதன் அணுக்கரு இரண்டு புரோட்டான்களைக் கொண்டது. ஹீலியமும் பல்வேறு ஐசோடோப்பு வடிவங்களில் கிடைக் கின்றது. ஒவ்வொன்றும் தன்னுடைய அணுக்கருவில் வெவ் வேறு எண்ணிக்கையைக்கொண்ட நியூட்ரான்களையுடையது. மிக இலேசாகவுள்ள ஹீலிய அணுக்கருவில் 2 புரோட்டான் களும், 1 நியூட்ரானும் உள்ளன. ஆகவே, அதன் குறியீடு :He'. இஃது இயற்கை ஹீலியத்துடன் மிகச் சிறிய அளவுகள்ல் கிடைத்த போதிலும், கதிரியக்கமுள்ள ட்ரைட்டானின்(T) மாற்றத்திலிருந்து கிடைக்கும் பொருளாகவே நமக்குத் தெரிந்தது ". அடுத்த அணுக்கரு சாதாரண ஹீலியத்தி னுடையது; அதில் 2 புரோட்டான்களும் 2 நியூட்ரான்களும் உள்ளன. அதன் குறியீடு 2He" என்பது ஏற்கெனவே நாம் அறிந்ததே. இஃது ஒரு நிலையான அமைப்பு என்றே சொல்ல 24. இந்த ஹிலியத்தின் அணுக்கருவும் ஹிலியத்தின் பிற ஐசோடோப்புக்களின் அணுக்கருக்களும் மேலே காட்டி யுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பெற்றுள்ளன.