பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 10 7 கணக்கிடுவதில் சங்கடம் : இன்னும் அணுக்கருவின் அமைப்புபற்றிய விவரங்கள் நமக்குச் சரியாகத் தெரியாமையினால், அணுக்கருவின் பண்பு களிலிருந்து பிணைப்பாற்றலைக் கணக்கிடமுடியாத நிலையில் இருக்கின்ருேம். ஆகவே, இதன் மறுதலையாக, நாம் வேறு முறைகளை மேற்கொண்டு பிணைப்பாற்றல்களின் அளவுகளை அறுதியிட முயல வேண்டும்; அணுக்கருவின் பண்புகளைப் பற்றிய முடிவுக்கு வருவதற்கு இந்த அளவுகளைப் பயன்படுத் தவும் வேண்டும். கணக்கிடும் முறை : ஒன்றுக்கு மேற்பட்ட துகள்களைக் கொண்ட மிகவும் எளிய அணுக்கரு ட்யூடெரான் (Deuteron) என்பது; இது. பொருண்மை-எண் 2ஐக் கொண்ட ஹைட்ரஜன் அணுக்கரு 6AirGih (Hydrogen nucleus); @Fáil g(G LIGJ frilu-rssyth GG5 நியூட்ரானும் உள்ளன. இந்த இரண்டு பகுதிப்பொருட் கூறுகளிலிருந்து அத்தகைய அணுக்கரு ஒன்று உண்டாகும் பொழுது, அந்த அணுக்கருவினைச் சிதைப்பதற்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகின்றதோ அதே அளவு ஆற்றல் வெளிப் பட்டாகவும் வேண்டும். எனவே, ஒன்றற்கொன்று தொலே விலுள்ளதும் தம்மிடையே ஒன்றற்கொன்று யாதொரு விசை வுையும் செலுத்தாததுமான புரோட்டாலும் நியூட்ரானும் அமைதிநிலையிலிருக்கும்பொழுது நமது கணக்கீட்டைத் தொடங்குகின்ருேம். இந்நிலையில், இவ்விரண்டு துகள்களைக் கொண்டதோர் அமைப்பிலுள்ள ஆற்றலே 0 என்று கொள் வோம்'. இந்த இரண்டு துகள்களும் ஒரு ட்யூடெரானகப் 2. ஒர் அமைப்பின் நிலையாற்றலை (Potential energy) O என்று எடுத்துக்கொள்ளலாம்; O-ஐத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்குக் காரணம் ஒன்றுமில்லை. செளகர்யத்தை முன்னிட்டுதான் இங்ங்ணம் எடுத்துக் கொள்ளப்பெறுகின்றது.