பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அணுக்கரு பெளதிகம் பிணைந்தவுடன் அந்த அமைப்பின் ஆற்றலிலிருந்து பிணைப் பாற்றலின் தனி அளவுக்குச் சமமான ஆற்றல் குறைந்து போகின்றது. ஏதாவது ஒரு வழியில் ஒரு ட்யூடெரானின் முழு ஆற்றலின் அளவை நம்மால் அளந்தறியக் கூடுமானல், அதன் பகுதிப்பொருள் கூறுகள் (Constituent parts) பிணை வதற்கு முன்பும் அவை பிணைந்த பின்பும் உள்ள ஆற்றல் களின் வேற்றுமையிலிருந்து அதன் பிணைப்பாற்றலின் அளவை அறுதிடல் கூடும்; அணுக்கருவின் நிலைப்புத்தன்மை யைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கும் இதனை அடிப்படை யாகப் பயன்படுத்தவும் செய்யலாம். இம்முறையைப் பின்பற்றியே மேலும் செல்வோம். இந்த அமைப்பில் இன்னுெரு புரோட்டானைச் சேர்ப்போம். இதளுல் ஹீலிய அணுக்கருவின் (2He") பிணைப்பாற்றலை அடைகின்ருேம். இம்மாதிரியே, படிப்படியாக, ஒவ்வோர் அணுக்கருவின் பிணைப்பாற்றலின் அளவையும் தொடர்ந்து அறுதியிட்டுக் கொள்ளலாம். ஆற்றல் அளவுகள் : பெளதிக அறிஞர் ஆற்றலை எர்க்' (Erg)என்ற அளவால் அளப்பது வழக்கம்; பொறியியல் வல்லுநர் அதை இராத் தலடி (Foot pound) அல்லது கிலோவாட் அவர் என்ற அள வால் அளந்து காண்பர். பெளதிக அறிஞர் வெப்ப ஆற்றல் களை அளப்பதற்குக் கேலரி' (Calorie) என்ற அளவினை மேற் கொள்ளுகின்றர். இங்ங்ணமே பெளதிக இயலின் பல பகுதி களிலும், தொழிற்றுறை அறிவியலின் பல பகுதிகளிலும் 3. ஒரு கிராம் அளவு பொருளின் 980-இல் ஒரு பங்கினை ஒரு சென்டிமீட்டர் உயரம் தூக்குவதற்கு வேண்டிய ஆற்றலே எர்க் என்பது. 4. ஒரு கிராம் அளவு நீரை வெப்பமானியின் (Thermometer) ஒரு சுழியளவு சூடேற்ற எவ்வளவு வெப்பம் வேண்டுமோ அந்த அளவு வெப்பமே கேலரி எனப்படும்.