பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 109 அவ்வவற்றிற்கேற்ற அளவைகள் பயன்படுகின்றன. அவை அவ்வப் பகுதிகளில் பயின்றுவரக்கூடிய ஆற்றல்களின் அளவு களுக்கேற்ப இருப்பதாலும், அவை மிகப்பெரியனவாகவோ சிறியனவாகவோ இராமல் கையாளுவதற்கேற்றவாறு இருப் பதாலும் அவை அவ்வத்துறைகளில் மேற்கொள்ளப்பெறு கின்றன. இதே விதி அணுபெளதிகத் துறைக்கும் பொருந்து கின்றது. அணு பெளதிக அறிஞர்கள் எலக்ட்ரானின் பிணைப் பாற்றல்களே அளப்பதற்கு அதிக வோல்ட்டு அளவுகளால் வேகமாக முடுக்கப்பெற்ற மின்னூட்டம்பெற்றதுகள்களைப்எலக்ட்ரான்களைப்-பயன்படுத்துகின்றனர். ஆகவே, இங்குப் பயன்படும் ஆற்றலின் அளவு ஒர் எலக்ட்ரான் ஒரு வோல்ட் மின்-அழுத்த வேறுபாட்டில் செல்லுங்கால் பெறும்ஆற்றவின் அளவாகும். (பொதுவாக ஏதாவது ஒரு துகள் ஒர் அடிப் படை குவாண்டம் மின்னூட்டம் பெற்றிருப்பதுதான் இந்த ஆற்றலில் அளவாகும்). இந்த ஆற்றல் அளவினை எலக்ட் ரான் வேரல்ட் (Electron-wolt) என்று வழங்குவர்; இதனை ew என்ற குறியீட்டால் குறிப்பது வழக்கம். இஃது அணுக் கருவின் புறத்தமைப்பை ஆராயுமிடத்து கையாளுவதற் கேற்ற வசதியான அலகாக உள்ளது: அஃது இந்த அமைப் பின் பிணைப்பாற்றல்களின் அளவுகளையொட்டி இருப்பதே இதற்குக் காரணமாகும். ஆல்ை, அணுக்கருவிலுள்ள துகள் களின் பிணைப்பாற்றல் இதைவிடக் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மடங்கு (ஒரு மில்லியன்) பெரிதாகும். ஆகவே, அணுக்கரு பெளதிகத்தில் இந்த அளவின் பத்து இலட்சம் (Million) மடங்கு அளவினைக் கையாளுவதே வழக்கிலிருந்து வருகின்றது.பத்து இலட்சம் ew= IMew. ஒருMew என்பது ஒரு துகள் ஒர் அடிப்படை குவாண்டம் மின்சாரத்தைத் தாங்கிக் கொண்டு பத்து இலட்சம் வோல்ட்டு மின்-அழுத்த வேற்று மையினிடையே செல்லுங்கால் பெறும் ஆற்றலின் அளவா கும். எனினும், ஒர் எர்க்குடன் (Erg) ஒப்பிடுங்கால், இது மிகவும் சிறிய அளவே. அஃதாவது, 1 Mev = i, 6 x 106 Gr ff &