பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் | 1 || ஆகவே, ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் சேர்ந்து ஒரு ட்யூடெரான் உண்டாகுங்கால் பேராற்றலைக் கொண்ட காமாக் கதிர் ஃபோட்டான் வெளிவருவதை எதிர்பார்க்க வேண்டும். இந்த ஃபோட்டானின் ஆற்றல் E-உம், அதன் அலைவெண் வ.உம் கொண்டுள்ள உறவு பிளாங்கின் E=h; என்ற வாய்பாட்டால் அறுதியிடப்பெறுகின்றது. இங்கு E என்பது ஃபோட்டானின் ஆற்றல்; என்பது அதன் அலே வெண்: i என்பது பிளாங்கின் மாறிலி (Plank's constant). எனவே, இந்த E என்ற ஆற்றல் ட்யூடெரானின் பிணைப் பாற்றலின் அளவுக்கு முழுதும் ஒத்துள்ளது. சோதனையின் மூலம் இந்தக் காமாக் கதிர்வீசலை நடைமுறையில் காணு தல் கூடும். அலை எண் என்பதையும் எப்படி அளப்பது என்பதை நாம் அறிவோமாதலின், ஒரு ட்யூடெரானின் பிணைப்பாற்றலை அளந்து காணல் சாத்தியப்படக்கூடியதே; அதன் அளவு 2.3 Mew க்குச் சமமாகின்றது. இந்த ஆற்றல் ஒரு ஃபோட்டாளுகப் போவதைவிடப் பல ஃபோட்டான் களாக வீசப்பெறலாம் என்று எவரும் கருதுதல் கூடும். எனி னும், அவ்வாறு நிகழ்வது உண்மையில் நடைபெறக்கூடாதது என்றும், ஒரே ஒரு ஃபோட்டாளுகப் பிரிதலே நேரிடக்கூடிய தென்றும் எளிதில் மெய்ப்பித்து விடலாம். வேருெரு எளியமுறை : • அணுக்கருவின் பிணைப்பாற்றலைப்பற்றி அறிந்துகொள்வ தற்கு மேற்கூறிய முறையைவிட எளிதான வேருெரு முறை யும் உண்டு. ஐன்ஸ்டைனின் சார்புக் கொள்கைப்படி (Theory of relativity) GG Gum Gefisir Gurgainenudžgið அதன் முழு ஆற்றல் அளவிற்கும் ஒர் எளிய உறவு முறை உண்டு. சார்புக் கொள்கை கண்டறியப்பெறுவதற்கு முன் 5. h என்பது மிகச் சிறிய எண்; அதன் அளவு 6.6.24 x 10-2 என்று கணக்கிடப்பெற்றுள்ளது. என் பதை நியு என்று ஒலிக்க வேண்டும். அது கிரேக்க நெடுங் கணக்கில் ஓர் எழுத்து.