பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 அணுக்கரு பெளதிகம் அ. பொ. அ. (அ.பொ. அ-3)என்று குறிப்பிடுதல் வழக்கம்: 1 அ. பொ. அ. -? இன் சரியான ஆற்றல் அஃதாவது 1 அ. பொ. அ- x c", 1 Mev என்ற ஆற்றல் அலகிலிருந்து மிகச் சிறிதளவுதான் வேறுபடுகின்றது. சரியாகச் சொன் ஞல், 1 அ. பொ. அ-? என்பது 0.93 Mewக்குச் சமமாகும். எனவே, அணுக்கருவின் பிணைப்பாற்றல்களும் 1 Mew என்ற ஒழுங்கு முறை அளவில் உள்ளன. பொருண்மை நிறமாலை வரைவான்: இவ்வாறு பெளதிக அறிஞர் ஒன்றற்கொன்று தொடர் பில்லாத வெவ்வேறு இரண்டு முறைகளால் பிணைப்பாற்றல் களைத் தீர்மானிக்கின்ருர்: அவர் அவற்றை நேராகவும் அளந்து காணலாம்; அல்லது பொருண்மைக் குறைகளிலிருந் தும் கணக்கிட்டு அறியலாம். பின்னைய முறையை மேற் கொண்டு அணுக்களின் பொருண்மைகளிலிருந்து பிணைப் பாற்றலைப் பகுத்தறிந்து கணக்கிட வேண்டுமாயின், அணுக் களின் பொருண்மைகளை மிக மிகச் சரியான முறையில் தீர் மானிக்க வேண்டும். காரணம், நாம் ஆயிரத்தில் ஒரு பாகம் (1/1000)போன்ற மிகச் சிறிய அளவுகளில் பொருண்மைகளை மேற்கொள்ளுகின்ருேம். சரியான முறையில் தீர்மானித் தால்தான் அவற்றிலிருந்து வருவிக்கப்பெறும் பிணைப்பாற் றலின் அளவும் சரியாக இருக்கும். பொருண்மை நிறமாலை aistogalirer (Mass spectrograph) 676ör p =ęguủ305696 puu# (Appratus)கொண்டு பொருண்மைகளைச் சரியாகக்கணக்கிட லாம். இந்தக் கருவியை முதன்முதலாகக் கண்டறிந்தவர் ஆஸ்டன்" என்ற அறிஞர். பொருண்மை நிறமாலை வரை வானில் மின்னூட்டம் பெற்ற அணுக்கள் மின்சார, காந்தப் 8. ஆஸ்டன்-Aston. இவர் தாம்சன் என்பவரின் மாளுக்கர். இவருடைய அறிவு நுட்பத்தினைக் கண்ட அறிவியல் உலகம் இவருக்கு நோபல் பரிசினை வழங்கிப் பாராட்டியது.