பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் I 19 நியூட்ரானின் பொருண்மையும் ஒன்றற்கொன்று சிறிது வேறு படுகின்றன. மேலும், அவை ஒன்று சேருங்கால் இரண்டன் பொருண்மைகளின் கூட்டுத்தொகையில் ஒரு சிறு பகுதி மறைகின்றது; இந்தப் பின்னம் அவற்றின் பிணைப்பாற்றலு டன் ஒத்துள்ளது. ஆகவே, புரோட்டானின் பொருண்மை நியூட்ரானின் பொருண்மைக்குச் சமமாக இருப்பினும், தனி மங்களின் அணு-எடைகள் ஒர் அடிப்படை அலசின் முழு மடங்கிகளாக இருப்பதில்லை. இதனுல், இலேசான தனிமங் களின் அணு-எடை முழு எண்களாக இராமல் சிறிதளவு வேறுபடுவதற்கு விளக்கம் கிடைக்கின்றது. ஆனல், பளு. வான தனிமங்களின் அணு-எடைகள் அதிக அளவு வேறு படுவதை வேருெரு முறையிஞல் விளக்க வேண்டும். இந்த வேற்றுமைகள் வெறுந்தோற்றங்களேயன்றி முழுதும் உண் மையல்ல; இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் அனைத்தும் பெரும்பாலும் பல்வேறு ஐசோடோப்புக்களின் (isotopes) கலவைகளாக இருப்பதால்தான் இவ்வேற்றுமையைக் காண் கின்ருேம். ஒவ்வொரு ஐசோடோப்பும் ஒரு குறிப்பிட்ட வகை உட்கருவைக் கொண்ட அணுக்களால் ஆனது: அதன் பொருண்மை-எண்ணும் கிட்டத்தட்ட ஒரு முழு எண் ளுகவே (Intiger) இருக்கும். ஆளுல், ஐசோடோப்புக்களின் கலவையின் சராசரிப் பொருண்மை-எண் ஒரு முழு எண் அன்று. அனுக்கருவின் நிலைப்புத்தன்மை: ஆகவே, அணுக்கருவின் நிலைப்பு (Stability)பற்றி நாம் விரும்பிய அளவையை (Criterion) நிறுவி விட்டோம். ஓர் அணுக்கரு ஒருங்கு இறுகப் பிணந்திருப்பதால், அதை அதன் பகுதிப் பொருள் கூறுகளாகச் சிதைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வினை தேவைப்படும். இவ்வாறு தேவைப் படும் s?&oruñér அ வள வு தா ன் பிணைப்பாற்றலின் அளவாகும்; இப் பி னை ப் பாற் ற லி ன் அ ள வே அ னு க் க ரு வி ன் பொருண்மைக் குறை ஆகும்; இஃது ஆற்றல் அளவைகளால் குறிக்கப்பெறுகின்றது. சிறி