பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 芷盛盘 னும், மின்னூட்டம் அழியாவிதியின்படி மேற்கூறிய செயல் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய நிபந்தனை உண்டு. அஃதா வது, புதியதாகத் தோன்றிய நேர் மின்சாரத்தின் அடிப்படை குவாண்டம் அதே சமயத்தில் தோன்றும் எதிர் மின்சார அடிப்படை குவாண்டத்தில்ை ஈடு செய்யப்பெற்று, பின்னது அணுக்கருவினின்றும் அகற்றப்பெறல் வேண்டும். ஒரு நியூட் ரான் புரோட்டாகை மாறுங்கால், அதே சமயத்தில் ஒர் எலக்ட்ரான் வெளிவிடப்பெற்று. இச்செயல் நடைபெறுதல் கூடும். உண்மையில், போரன் அணுக்கரு நிலைப்புள்ள ஒர் அமைப்பு அன்று: அது கதிர்வீசலுடையது. அஃது எலக்ட் ரான்களை வெளிவிட்டு,-அஃதாவது எதிர் மின்னூட்டமுள்ள பீட்டாக் கதிர்களே வெளிவிட்டு- ஒரு கார்பன் அணுக்கரு வாக மாறுகின்றது. நியூட்ரினே : ஆயினும், கோணத் திருப்புதிறன் அழியாவிதி இயங்கா விடின் இந்த மாற்றம் நேரிட முடியாது. முன்னர் நாம் குறிப் பிட்டபடி, ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும் சேர்ந்த தன் கோணத் திருப்புத்திறன்" h/2 ஆகும்; அதன் வெளி அமைப்பிலுள்ள அச்சின் சுழற்சிக்கேற்றவாறு அது தேர் அள வாகவோ (Positive), எதிர் அளவாகவோ (Negative) இருக் கும். ஆகவே, இரட்டைப்படை எண்ணுள்ள துகள்களைக் கொண்ட அணுக்கருவின் கோணத் திருப்புத் திறன் h/2-இன் இரட்டைப்படை எண் மடங்கியாகவே (Even multiple) இருக்கும். கார்பன் அணுக்கருவும் போரன் அணுக்கருவும் 12 துகள்களைச் கொண்டவை; ஆகவே, ஒவ்வொன்றினுடைய அணுக்கருவின் கோணத் திருப்பு:திறள் h-இன் மடங்கியைக் கொண்ட ஒரு முழு எண்ணுகவே இருத்தல் வேண்டும், ஆனல். மின்னூட்டம் அழியாவிதிக்கிணங்க,மாற்றச் செயல் 9. கோணத் திருப்புதிறன், தற்சுழற்சி (Spin) என் றும் வழங்கப்பெறும்.