பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அணுக்கரு பெளதிகம் அணுக்கருவின் பிணைப்பு : இந்தச் சந்தர்ப்பத்தில் பொருண்மைக் குறைவுகள் ஒரு விதத்தில் மிக முக்கியமாகின்றன. அவற்றிலிருந்து நாம் பிணைப்பாற்றலேக் கணக்கிடலாம்; அணுவினுள்ளிருக்கும் தனித்தனித் துகள்களின் ஆற்றல்களைக் கணக்கிட்டால், கிட் டத்தட்ட எல்லா அணுக்களிலும் அவை ஒரே அளவில் இருப் பதையும் காண்கின்ருேம். அலுமினியம் வரையிலுமுள்ள இலேசான அணுக்களின் தனித்த அளவு(Absolute magnitude) மிகக் குறைவாக இருப்பதால், அவை இவ்விதிக்கு விலக் கானவை. ஏனைய அணுக்கள் யாவற்றிலும் அணுக்கரு விலுள்ள ஒவ்வொரு துகளின் பிணைப்பாற்றல் எப்பொழுதும் 6-லிருந்து 9 Me வரையிலும் உள்ளது. ஆகவே, எல்லா அணுக்கருவின் துகள்களும் ஏறக்குறைய ஒரே அளவு இறுக் கத்துடன் பிணைந்துள்ளன என்று எண்ணவேண்டியுள்ளது. அணுக்கருவின் குறுக்களவு : அணுக்கருவின் பருமனிலிருந்து நாம் மேலும் ஒரு முடி வினைப் பெறலாம். ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆல்பாத் துகளின் எவ்வளவு பகுதி ஒதுக்கம் பெறுகின்றது என்பதை கண்டறிவதன்மூலம் அந்தப் பொருளின் உட்கருவின் விட் டத்தை ஓரளவிற்குக் கணக்கிடலாம். இவ்வாறு ஏற்படும் ஆல்பாத் துகள்களின் ஒதுக்கம் உட்கருவின் வெளிப்பகுதியில் உள்ள மின்புலத்தினல் ஏற்படுவதன்று; ஆனால், ஆல்பாத் துகள்கள் அணுக்கருவின் மீது மோதுவதனால் ஏற்படுவதாகும் அது. அணுக்கரு எவ்வளவுக்கெவ்வளவு பெரிதாகவுள்ளதோ அதற்கேற்ருற்போல் அடிக்கடி நிகழும் இத்தகைய மோதுதல் களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இந்தச் சோதனை களால் 238 துகள்களைக் கொண்ட யுரேனிய அணுக்கருவின் குறுக்களவு 4 துகள்களைக் கொண்ட ஹீலிய அணுக்கருவின் குறுக்களவைப் போல் நான்கு மடங்கு பெரிதாக உள்ளது என்று அறிகின்ருேம். அவற்றின் பருமனளவுகளும்(Volumes) முறையே 1க்கும் 4°க்கும் உள்ள விகிதத்தில் உள்ளன; அஃதா