பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்கரின் இயல்பான நிலைகள் I2 7 புறப்பரப்பு இழுவிசை காரணமாகின்றது என்பதையும் விளக்குகின்றன. ஏனெனில், ஒரு துளியின் புறப்பரப்பின் ஆற்றலும் அதன் புறப்பரப்பும் ஒரு விகித சமமுறையில் அமைந்துள்ளன; ஆகவே, அவ்வாற்றல் புறப்பரப்பை எவ் வளவுக்குச் சிறிதாகச் செய்யக் கூடுமோ அவ்வளவுக்குச் சிறி தாகச் செய்ய முனைகின்றது. அணுக்கருக்களிலும் இத்தகைய புறப்பரப்பு இழுவிசை இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்ளவேண்டும். புறப்பரப்பிலுள்ள துகள்களின் குறை வான அண்மைப் பிணைவின் (Cohesion) காரணமாக, இந்தப் புறப்பரப்பு இழுவிசை மொத்தப் பிணைப்பாற்றலில் சிறிது குறைவை உண்டாக்கவேண்டும்; அதனுல் ஒவ்வொரு துகளின் சராசரி ஆற்றலும் சிறிதளவு குறைய வேண்டும். திரவத் துளியிலிருப்பது போலவே, அணுக்கருக்களிலும் அவற்றின் கோளவடிவிற்குப் புறப்பரப்பு இழுவிசையே காரணமாக உள்ளது. முக்கிய வேற்றுமை: எனினும், அணுக்கருப் பொருளுக்கும் ஒரு திரவத்திற் கும் ஒரு முக்கிய வேற்றுமை உள்ளது. திரவத்திலுள்ள மூலக் கூறுகள் மின்சார நடு நிலையுடன் உள்ளன; ஆனால், அணுக் கருப்பொருளில் நியூட்ரான்கள் இருப்பதுடன், மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களும் உள்ளன. ஆகவே, நம்முடைய ஒப்புமை அணுக்கருக்களுக்கும் ஒன்றற்கொன்று எதிராக s?aig; sūames&russol -u (Forces of repulsion) Sérgirl:டம் பெற்ற மூலக் கூறுகளைக் கொண்ட திரவத்துளிகளுக்கும் பொருந்துவதாக இருக்கவேண்டும். அன்றியும், அணுக்களின் உட்கருக்களில் விலக்கும் மின்விசையும் உள்ளது. (III) மூவகை அணுக்கருவாற்றல் ஆகவே, நாம் ஓர் அணுக்கருவிலுள்ள முழு ஆற்றல் மூன்று கூறுகளின் கூட்டுத்தொகை என்று கருதவேண்டும். அணுக்கருவின் அண்மைப் பிணைவிற்குக் காரணமாகவுள்ள