பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் I 33 கருக்களை அளத்தலிலிருந்து-இதுவும், சரியாக அன்றுஅறிவோம். மாறிலிகளின் மதிப்புக்கள்: இந்தச் சமன்பாட்டைப் பயன்படுத்த வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட நான்கு மாறிலிகளின் சரியான மதிப்புக் களே அறிதல் மிகவும் இன்றியமையாதது. அணுக்கருவினுள் ளிருக்கும் விசைகளைப்பற்றி இன்னும் அதிகமாகவும், அணுக் கரு விசைகளைப்பற்றிச் சிறப்பாகவும் அறியக் கூடுமாயின், அவற்றைக் கொள்கை முறையில் (Theoretically) கணக்கிட்டு விடலாம். ஆனல், உண்மையில் இதன் மறுதல் முறைதான் நமக்குக் கிடைக்கின்றது. அணுக்கருவின் பிணைப்பாற்றல் களைப்பற்றி ஏற்கெனவே அறிந்துள்ள தகவல்களைக் கொண்டே, அஃதாவது பொருண்மைக் குறைகளைக் கொண்டே, அவற்றின் அனுபவ பூர்வமான (Empirical) அளவைகள் தீர்மானிக்கப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக ஃபுளுக்கே' என்பாரும்,. வி. ட்ரோஸ்டே' என்பாரும் மேற் கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இம்முறையைக் கையாண்டு அடியிற்கண்ட எண் அளவைகளைக் கணக்கிட் டுள்ளனர்: A = 0.0.1574 அ. பொ. அ; B = 0.022 அ. பொ. அ: C = 0.0165 அ. பொ. அ; 3e” 5ro - 0.000646 அ. பொ. அ. சமன்பாட்டின் வரைப்படம். இவ்வாறு அணுக்கருவின் பிணைப்பாற்றல்கள் அனுபவ. உண்மைகளுடன் நன்ருகப் பொருந்துவதை வரைப்படத் 12. LogoźGs-Flugge. 13. c3. u t-GrrrewGu–-V. Droste,