பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 அணுக்கரு பெளதிகம் தால் (Graph) விளக்கிக் காட்டலாம். படம் 11-இல் உள்ள வளைவரை (Curve) நமது சமன்பாட்டை விளக்குகின்றது: அது மேற்காட்டிய மாறிலிகளின் மதிப்புக்களுடன் கிட்டத் தட்டப் பொருந்துகின்றது: இந்த வளைவரை, தெரிந்த அணு எடைகளையுடைய நிலைப்புள்ள எல்லாத் தனிமங்களின் ஆற் றல்களையும் காட்டுகின்றது. பிணைப்பாற்றல் ஓர் எதிர் அளவு ஆதலின், ஒரு புள்ளி எவ்வளவுக்கெவ்வளவு கீழாக இருக் سستهساسسیسم-سسسهیسپاهیان عه Tর? Jöö #5s; 200 منچسسه 2 / படம்.11: N-Z என்ற சார்பலன்களில் அணுக்கருக் களின் பிணைப்பாற்றல்களைக் காட்டுவது. கின்றதோ, அஃது அவ்வளவுக்கவ்வளவு அதிகமாகத் தனிமங் களின் பிணைப்பாற்றல் விளக்கிக் காட்டும். வளைவரையின் தெடுகக் காணப்பெறும் புள்ளிகள் பொருண்மைக் குறைகளி லிருந்து கணக்கிடப்பெற்ற ஒவ்வொரு துகள்களின் பிணைப் பாற்றலின் மதிப்புக்களைக் காட்டுவனவாகும். இப்பொருத் தம் மிகத் திருப்திகரமாக இருப்பதைக் காணலாம். வளைவரை விளக்கம்: இந்த வளைவரையைப் பகுத்து ஆராய்வோம். இதன் மிகக் கீழ் நிலையிலுள்ள புள்ளியைச் சமன்பாட்டின் மிகப் பெரிய உறுப்பாகிய -Aயைக் கொண்டு மிகத் தெளிந்த முறையில் உறுதியாகத் தீர்மானிக்கலாம். மிகச் சிறிய