பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருக்களின் இயல்பான நிலைகள் 135 அணு-எடைகளில்ை ஏற்படும் ஏற்றத்திற்குக் காரணம். புறப் பரப்பு இழுவிசையே யாகும்; இவ்விசை இயல்பாகவே இலேசான அணுக்கருக்களில் மிக முக்கிய பங்கெடுத்துக் கொள்ளுகின்றது. பளுவான அணுக்கருக்களில் இது நேரிடு வதற்குக் காரணம், புரோடடான்களிடையே காணப்பெறும் 1fisira?awäg; o$ @4Gu (Electric repulsion) turré;ib. மேலும், இலேசான அணுக்கருக்களில் பெரும்பாலும் கிட்டத்தட்ட நி யூ ட் ரா ன் க ளி ன் எண்ணிக்கையைப் போலவே புரோட்டான்களின் எண்ணிக்கையும் உள்ளது என்பதை நமது சமன்பாடு உணர்த்துகின்றது. மின்சார விலக்கு விசையைக் குறிப்பிடும் இறுதி உறுப்பு, Zஇன் மதிப்பு அதிகரிப்பதற்கேற்றவாறு அதிகரிக்கின்றது; இலேசான அணுக்களில் 2-இன் மதிப்பு குறைவாக இருக்கும்பொழுது அது முக்கிய பங்கு பெறுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங் களில் அதைத் தள்ளுபடி செய்துவிடலாம். மூன்ருவது உறுப்பு துகள்களின் மொத்த எண்ணிக்கையை மட்டிலும் கொண்டே தீர்மானிக்கப்பெறுகின்றது; இரண்டாவது உறுப் பைப்போல் அவற்றின் விகிதத்தைக்கொண்டு அறுதியிடப் பெறுவதில்லை; N = Z ஆக இருக்கும்பொழுது, அஃதாவது புரோட்டான்களின் எண்ணிக்கை நியூட்ரான்களின் எண்ணிக் கைக்குச் சமமாக ஆகும்பொழுது, இரண்டாவது உறுப்பு மறைகின்றது; இந்நிலையில் பிணைப்பாற்றல் உச்ச(Maximum) அளவினை அடைகின்றது. ஆற்றலைப் பொறுத்தமட்டிலும். இது மிகவும் செளகர்யமான நிலையாகும். ஆனால், பளுவான அணுக்களைப் பொறுத்தமட்டிலும் இங்ங்ணம் ஏற்படுவதிம்ல; இங்குச் சமன்பாட்டின் இறுதி உறுப்பு, பிணைப்பாற்றலில் நன்கு புலனுகக் கூடிய அளவு, குறைவினை உண்டாக்குகின் றது. ஆற்றல் நிலையைப் பொறுத்தவரையில், இரண்டாவது உறுப்பு சற்று உயர்ந்தால் மிகவும் இலாபகரமாக இருக்கும்; இதனுல் N/2 என்ற விகிதம் 1ஐ விடச் சற்று உயர்ந்து அதன் விளைவாக நான்காவது உறுப்பின் அளவு மிக அதிகமாகக் குறையக் கூடும்.