பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அணுக்கரு விசைகள் (1) அணுக்கருப் புலத்தின் பொதுப்பண்புகள் அணுக்கரு விசைகளின் இயல்புகள்: அணுக்கருவினுள் புரோட்டான்களும் நியூட்ரான்களும் நாம் குறிப்பிட்ட "அணுக்கரு விசைகள்' (Nuclear forces) என்ற விசைகளால் நெருங்கிப் பிணைவுற்றிருக்கின்றன. ஆளுல், அவ்விசைகளின் இயல்பைப்பற்றி இன்னும் நாம் ஆராயவில்லை. அணுக்கருவினுள் செயற்படும் மின்விலக்கு விசைகளும் உடைப்புவிளைவினை மட்டிலுமே உண்டாக்கு கின்றன. இந்த அணுக்கரு விசைகளின் இயல்பைப்பற்றி மேற்கொள்ளப்பெறும் சோதனைகளிலிருந்து இன்று நாம் அறிந்து கொள்வதென்ன? இந்த வினவிற்குரிய விடை மேற் கொள்ளும் வடிவத்தைப்பற்றி முதலில் சுருக்கம்ாக ஆராய் வோம். மின் விசைகள் என்பவை யாவை என்பதைப்பற்றி இன்னும் நாம் அறிந்து கொள்ளாமலிருந்தால், அவற்றின் இயல்பைப்பற்றிய ஆராய்ச்சியை எங்ங்ணம் தொடங்குவது? மின்னூட்டங்கள் ஒன்றையொன்று விலக்குகின்றன என்று கூறி நம் ஆராய்ச்சியைத் தொடங்கலாம். இவ்வாறு விலக் கும் விசை அம் மின்னுரட்டங்களுக்கிடையேயுள்ள தூரத்தின் மடக்கெண்ணின் தலைகீழ் விகிதத்திற்கேற்றவாறு குறை கின்றது. பத்தொன்பதாம் நூற்ருண்டின் தொடக்கத்தில் பெற்ற அறிவின்படி, மின்விசைக்கும் காந்த விசைக்கும்