பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அணுக்கரு பெளதிகம் ஆனல், அது 0.யத்தின் வழியாகச் சென்று, நேர் அளவில் அதிகமாகி அதன் பிறகு அஸிம்டோட்டாக 0-யத்தை நோக்கி இறங்குகின்றது. இரண்டு புரோட்டான்களுக்கும் இடையே, நாம் மின் அழுத்த அரண்' (Potential barrier) என வழங்கும் தடையொன்று உள்ளது; இதன் மாதிரி யொன்று திரும்பத்திரும்பப் பின்னல் ஆராயப்பெறும். இதுகாறும் கூறியதனக்கொண்டு, தனித் தனியாகவுள்ள இரண்டு புரோட்டான்கள் ஒன்ருேடொன்று பிணையக்கூடிய நிலையொன்று உள்ளது என்பதை ஊகிக்கலாம்; அஃதாவது, அவற்றினிடையேயுள்ள தூரங்கள் மிகச் சிறியனவாக இருக் கும்பொழுது, அணுக்கருவின் கவர்ச்சி விசை மின்சார விலக்கு விசையை வென்றுவிடுகின்றது. ஆளுல், இந்நிலை எப் பொழுதுமே நேரிடுவதில்லை. முன்னரே குறிப்பிட்டவாறு, ஒன்ருேடொன்று பிணைந்துள்ள இரண்டு துகள்கள் ஒன்ருே டொன்று உறவுமுறையில் சதா அதிர்வடைகின்றன. மிகக் குறைந்த ஆற்றலுள்ள பொது நிலையிலும் அல்லது(அசையா நிலையிலும்) இதே நிலைதான் நிலவுகின்றது. இந்தப் பூச்சியநிலை.அசைவு (Zaro point wibration) மிக ஆற்றல் வாய்ந்ததாக இருப்பதால் தனிப்பட்ட புரோட்டான்களுக்கிடையே நிரந் தரமான பிணைப்பு இருப்பது சாத்தியமில்லை. ஆளுல், புரோட்டான்களுக்கிடையேயுள்ள கவர்ச்சி மிகச் சிக்கலான அணுக்கருக்களில் மிக முக்கிய பங்கினைப் பெறுகின்றது என் பது உறுதி. ஆகவே, நாம் இப்பொழுது மொத்தத்தில் அணுக் கரு விசைகளைப்பற்றிய முழுவதும் தழுவிய கருத் களப் பெற்று விட்டோம். நியூட்ரானுக்கும் புரோட் டானுக்கும் இடையேயுள்ள கவர்ச்சி விசைதான் இவற் றுள் மிக முக்கியமானது. மேலும், இரண்டு புரோட்டான் களுக்கிடையில் அல்லது இரண்டு நியூட்ரான்களுக்கிடையில் இதே அளவுள்ள விசையொன்று செயற்பட்டுக்கொண்டுள் ளது. இந்த அணுக்கரு விசைகளின் செயற்படும் வீச்சு,