பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் I 55 களில் இந்த அணுக்கருப் புலம் தன்னுடைய மையத்திலிருந்து தொடர்ந்தாற்போல் உறைப்பு குறைந்துகொண்டு செல்லும் ஒருகுறுகியவீச்சுப் புலக்கூறினேமேற்கொள்ளுகின்றது; அதுவே அமைதியற்ற செயல்களில் ஓர் அலைக்கதிர் வீச்சல்கூறினைப் பெறுகின்றது. உற்று நோக்குவதற்கு மேற்கொள்ளப்பெறும் முறைக் கேற்றவாறு பின்னது அலைக் கதிர் வீசலாகவோ, அன்றி துகள்களாகவோ கண்டறியப்பெறலாம். ஒர் எலக்ட் ரான் மற்ருேர் எலக்ட்ரான் மீது செலுத்தும் விசையை இரண்டு வழிகளில்-முதலில், அலைகளின் மூலமாகவும், அஇன் பிறகு துகள்களின் மூலமாகவும்-விவரித்து, இதனை நாடி நன்கறிந்த மின்புலத்துடன் ஒப்பிட்டு விளக்க முயலு வோம். எலக்ட்ரான் உண்டாக்கும் மின்புலம்: முதலாவதாக, ஒர் எலக்ட்ரான் தன்னைச் சுற்றிலும் ஒரு மின்புலத்தை உண்டாக்கிக் கொள்ளுகின்றது என்றும், இந்த மின்புலம் மாக்ஸ்வெல்லின் சமன்பாடுகளுக்கிணங்கப் பரவு கின்றது என்றும் நாம் கூறுவோம். இந்தப் புலம் வேருெரு எலக்ட்ரான்மீது பட்டு அதனிடத்தில் ஒரு விசையை உண் டாக்கலாம்; மற்ருெரு கூறின் அடிப்படையில் இதையே இவ் வாறு கூறலாம்: ஒர் எலக்ட்ரான் ஒரு துகளினை-ஃபோட் டான-உண்டாக்குகின்றது; இந்த ஃபோட்டான் அதன் பிறகு மற்ருேர் எலக்ட்ரானுல் உட்கவரப்பெறுகின்றது. இவ் வாறு, முதலாவதாகக் குறிப்பிடும்பொழுது ஒரு புலம் உண் டாதலையும் இரண்டாவதாகக் குறிப்பிடும்பொழுது ஒரு துகள் உண்டாதலையும் நாம் பேசுகின்ருேம்; முதற் கூறில் "ஒரு புலத்தின் செயல்' என்பதையும், இரண்டாவது கூறில் ஒரு துகளில்ை ஒர் ஃபோட்டான் உட்கவரப்பெறு தல் என்பதையும் சுட்டுகின்ருேம். இந்த நிகழ்ச்சிகளின் நிலையை அடியிற் கண்டவாறு அமைப்பு முறையில் (Schematically) வகைப்படுத்தி உணர்த்தலாம்: அலைக் கூறு: எலக்ட்ரான் புலத்தைப் படைக்கின்றது: புலம் மற்ருேர் எலக்ட்ரான்மீது படுகின்றது.