பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 157 துகள் கூறு: நியூட்ரான் எலக்ட்ரானையும் தியூட்ரிளுே வையும் வெளிவிடுகின்றது; எலக்ட்ரானும் நியூட்ரினேவும் புரோட்டானல் உட்கவரப்பெறுகின்றன. நியூட்ரானுக்கும் புரோட்டானுக்கும் இடையே செயற் படும் விசைக்கு இவ்வாறு விளக்கம் கூறி விசையின் செயலு டன் மின்னூட்டத்தின் பரிமாற்றம் தொடர்பு கொண்டிருப் பதைக் காண்கின்ருேம். அஃதாவது, இந்த விசையைச் செலுத்துவதற்கு நியூட்ரான் ஓர் எலக்ரானையும் நியூட்ரினே வையும் வெளிவிட வேண்டுமானல், அதன் மின்னுரட்டம் மாற்றப்பெறுகின்றது; அது புரோட்டாகை மாறுகின்றது. இதன் மறுதலையாக, புரோட்டான் ஒர் எலக்ட்ரானையும் ஒரு நியூட்ரினேவையும் உட்கவர்வதல்ை,அஃது ஒரு நியூட்ரா கை மாறுகின்றது. ஒரு புரோட்டான் ஒரு பாசிட்ரானையும் ஒரு நியூட்ரினேவையும் வெளிவிடும்பொழுது இதைப் போன்ற மிகச் சரியான மாற்றமே நிகழலாம்; இந்த இரண்டு துகள்களும் நியூட்ரானல் உட்கவரப்பெறுகின்றன. பரிமாற்ற விசைகள்: எனவே, அணுக்கரு விசைகள் மின்னூட்டம் பெற்ற துகள்களின் பரிமாற்றத்துடன் உறவு கொண்டுள்ளன; இக் காரணத்தினுல் இந்த வகை விசைகள் பரிமாற்ற விசைகள்' (Exchange forces) என்று வழங்கப்பெறுகின்றன. அவை மிகவும் நூதனமான பண்புடனுள்ளன; அவற்றின் சிறப்புக் கூறின் காரணமாகவே, அவற்றின் செயல் இரண்டு பங்காளி (Partners) களுக்கிடையேயுள்ள செயல்களின் பரிமாற்றத்து டன் தொடர்புபடுத்தப்பெறுகின்றன. ஆதலின், இந்த முறையில் அவை மின்விசைகளினின்றும் முற்றிலும் வேறு படுகின்றன. ஆளுல், வேதியியல் விசைகளுடன் கொண்டுள்ள உறவு முறை மீண்டும் வெளிப்படையாக உள்ளது. பொது வாக வேதியியல் விசைகளும் பொதுவாகப் பரிமாற்ற விசை