பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அணுக்கரு பெளதிகம் களாகக் கருதப்பெறலாம் என்று ஏற்கெனவே குவாண்டக் கொள்கை காட்டியுள்ளது. ஏனெனில், வேதியியல் விசை களிலும்கூட இத்தகைய மின்னூட்டங்களின் பரிமாற்றம் நிகழ்கின்றது. இதன் மிக எளிய எடுத்துக்காட்டு ஹைட் ரஜன் மூலக்கூறின் அயனியாகும்; இந்த அயனியில் ஒரு ஹைட்ரஜன் அணுவும் ஒரு ஹைட்ரஜன் அணுக்கருவும் அடங்கியுள்ளன. (படம் 17). ஆகவே, உண்மையில் அஃது படம்-17: ஹைட்ரஜன் மூலக் கூறின் அயனியைக் காட்டுவது. که سم ح இரண்டு புரோட்டான்களைக் கொண்ட ஒர் அமைப்பாகும்: அந்தப்புரோட்டான்களை ஓர் எலக்ட்ரான் சுற்றிக்கொண்டுள் ளது. இந்த அயனி ஒரு நிலத்த அமைப்பு: அதை ஒன்ருகச் சேர்த்து வைக்கும் விசையாகிய ஓர் எல்க்ட்ரான், ஒரு சமயம் ஒருபுரோட்டானையும்.பிறிதொரு சமயம் இன்னொரு புரோட் டானையும் சுற்றி வருவதல்ை உண்டாவது. இதிலும் கூட. நாம் மின்னுாட்டப் பரிமாற்றத்துடன்-எலக்ட்ரான் ஒரு புரோட்டானிலிருந்து பிறிதொரு புரோட்டானுக்கு மாறு தல்-விசை தொடர்புகொண்டிருப்பதைக் கண்ணுறுகின் ருேம். பரிமாற்ற விசையை விளக்கும் சோதனை: பரிமாற்ற விசை என்ற பொதுமைக்கருத்தினை அடியிற் கானும் சோதனையின் அடிப்படையில் இன்னும் மிக எளிதாக உணரலாம். இந்தச் சோதனை 1948-இல் கலிஃபோர்னி யாவில்பெரிய லாரென்ஸ் சைக்லோட்ரான் (Cyclotron)என்ற கலிஃபோர்னியா-Colifornia.