பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 16. I பூக்காவா கொள்கை : அணுக்கருப் புலத்திற்கும் எலக்ட்ரான்கள், பாசிட்ரான் கள். நியூட்ரினுேக்கள் ஆகியவற்றிற்கும் இடையே வேறு இனத் தைச்சேர்ந்த துகள்கள் உள்ளன என்றுகருதுகின்ருர்யூக்காவா: இத்துகளைத் தற்காலிகமாக நாம் யூக்காவா துகள் (Yukawa particle) என வழங்குவோம். இந்த யூக்காவா துகள்கள் எலக்ட்ரானின் பொருண்மையைப்போல் பல நூறு மடங்கு பொருண்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவை நேராகவோ, அன்றி முடிவாக விளைவினை உண்டாக்கும் பிற சிதைந்தழிவுச் செயல்களின் மூலமாகவோ எலக்ட்ரான்களா கவும், பாசிட்ரான்களாகவும் நியூட்ரினுேக்களாகவும் சிதைந் தழியக் கூடியவை என்றும் ஊகிக்கப்பெறுகின்றன. ஆகவே, அணுக்கரு உரு மாற்றங்களில் யூக்காவாவின் கொள்கைப் படி, அத்தகைய யூக்காவா துகள் உண்மையில் வெளி விடப் பெறுதல் வேண்டும். என்றபோதிலும், அவ்வாறு நிகழ்வதில்லை; ஏனெனில், யூக்காவா துகள் மிகப் பெரிய நிலைப் பொருண்மை (Rest mass) யுடையது; அஃது உண்டா வதற்குரிய ஆற்றல்- mc2-கிடைப்பதில்லை. ஆனல், யூக் காவா துகள் (நேர்முறையிலோ அல்லது வேறு செயல்களின் மூலம் நேரல் முறையிலோ எலக்ட்ரான்களாகவும் நியூட்ரி ளுேக்களாகவும் சிதையக்கூடும்; சில சமயம் அத்துகள்கள் உண்டான வுடனேயே இச் சிதைதல் நிகழ்ந்துவிடுகின்றது; ஆகவே, இலேசான துகள்களாகிய எலக்ட்ரானும் நியூட்ரி னேவும் உண்டாவதற்குத் தேவையான ஆற்றலைத் தருவ தற்கு அது போதுமானது. எனவே, இக் கொள்கைப்படி அணுக்கரு உருமாற்றம் அடையும் செயல் பல படிகளில் (Several steps) நடைபெறுகின்றது. முதலாவதாக, அணுக் கருப்புலத்திலிருந்து யூக்காலா துகள் உண்டாகின்றது;அல்லது இன்னும் சரியாகச் சொன்னல், அணுக்கருப்புலமே யூக்காவா துகளுடன் முற்றிலும் பொருந்துகின்றது; அத் அ-11