பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் 1 & 3 மடங்கு உடையது) மீண்டும் ஒர் எலக்ட்ரானகவும், ஒருக் கால் இரண்டு மின்சாரச் சமனிலைத் துகள்களாகவும் சிதை கின்றது. இங்கு எலக்ட்ரான்களும் நியூட்ரிளுேக்களும் வெளி விடப்பெறுதல் மிகச் சுற்று வழிகளில் மட்டிலும் உண்டாவ தாகக் கருதப்பெறுகின்றது; ஒரளவு இதற்குக் காரணம் யாதெனில், வேறு அணுக்கரு மாற்றங்கள் ஏற்படு நிலையுடன் ஒப்பிட்டு நோக்க, ஒரு பீட்டாச் சிதைந்தழிவு ஏற்படுநிலை மிகமிகச் சிறிதாக உள்ளது. நாம் உறுதியாக அறிவது : அணுக்கரு விசைகளுக்கும் அவற்றுடன் தொடர்புள்ளன வாகக் கருதப்பெறும் அடிப்படைத் துகள்களுக்கும் உள்ள உறவுபற்றிய பிரச்சினே மிகச் சிக்கலானது என்பதையும் இந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன; பல்லாண்டுகள் கடந்த போதி லும் இந்தப் பிரச்சினேக்குத் தீர்வு காண முடியாது. இச்சம யத்தில் நமக்கு உறுதியாகத் தெரிவது இதுதான்: பெரும் பாலும் அணுக்கரு விசைகள் யாவும் பரிமாற்ற விசைகளே: நிலைப்பற்ற அடிப்படைத் துகள்களும் உள்ளன; இத்துகள் களின் பொருண்மை ஓர் எலக்ட்ரானின் பொருண்மைக்கும் ஒரு புரோட்டானின் பொருண்மைக்கும் இடைப்பட்ட தாகும்; இந்த அடிப்படைத் துகள்கள் ஏதோ ஒரு வகையில் அணுக்கரு விசைகளுடன் உறவு கொண்டுள்ளன. மிகப் பெரிய ஆற்றலைக்கொண்ட அணுக்கருச் சிதைந்தழியும் செயல்கள் இதுகாறும் ஆராயப்பெற்றதைவிட இன்னும் மிகத் திருத்தமாக ஆராயப்பெறும்பொழுதுதான். மேலும் விளக்கம் பெறுவதற்குச் சாத்தியப்படும். - -