பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 அணுக்கரு பெளதிகம் படை விதியம்(Li) மிக அரிதாகக் கிடைப்பது இறுதியாக, மிகச் சில இருமடங்கு ஒற்றைப்படை' அணுக்கருக்களே இயற்கையில் உள்ளன என்ற உண்மையை நாம் கவனத்தில் இருத்துதல் வேண்டும். இவற்றுள் மிகளளிதானது ட்யூடெரி யத்தின் (Di) அணுக்கருவாகிய ட்யூடெரான் என்பது, ஏனையவை: லிதிய அணுக்கரு (sli), போரன் அணுக்கரு (sB'), நைட்ரஜன் அணுக்கரு (N') என்பவையாகும். இந்த வகையின் மற்றவை யாவும் கதிரியக்கமுள்ளவை; அவை எலக்ட்ரான்களையோ பாசிட்ரான்களையோ வெளி யிட்டு மாறக் (சிதைந்தழியக்') கூடியவை. மேலும் அணுக்கருவின் நிலைப்புடைமைபற்றிய ஆராய்ச்சி: மேற்கூறப்பெற்ற ஆராய்ச்சிகளின் அடிப்படையில், அணுக்கருவின் நிலைப்புடைமைப் பிரச்சினையை இன்னும் மிக விவரமாகப் பகுத்து ஆராய்வோம். ஏற்கெனவே நாம் ஆற் றல் பரப்பு என்ன என்பதைக் கூறியுள்ளோம் (படம்-12). இது மிகச் செங்குத்து நிலையில் சாய்ந்துள்ள பரப்பு ஆகும்; அதன் அடியில் ஒரு கால்வாய் அல்லது பள்ளம் (Groove) உள்ளது; இந்தக் கால்வாயின் அடிப்பக்கத்தில் நிலைப்புட னுள்ள அணுக்கருக்கள் உள்ளன. இப்பொழுது நாம் இடப் புறத்தின் மேலிருந்து வலப்புறத்தின் கீழாக ஆயங்களுக்கு 45° இருக்குமாறு கால்வாய்க்கு மூலைவிட்டமாக வெட்டு வோம்: இப்பொழுது மேற்படி பரப்பின் குறுக்கு-வெட்டினே நாம் பெறுகின்ருேம் (படம்-18). இவ்வாறு வெட்டியதன் விளைவாக, இந்தக் குறுக்கு-வெட்டில் N-Z என்ற ஒரே கூட்டுத்தொகையுள்ள, அஃதாவது ஒரே பொருண்மை-எண் ணைக் கொண்ட, அணுக்கருக்கள் அடங்கியிருக்கும். N-2, என்பது ஒர் ஒற்றைப்படை எண்ணுக இருக்குமாறு இந்தக் குறுக்கு-வெட்டினை முதலாவதாக ஒழுங்குபடுத்துவோம். இதன் விளைவு ஒரு வளைவரையாகின்றது; அதன் மிகக் கீழான