பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு விசைகள் I 79 எடைகளின் பெரும்பாலான அளவீடுகள் முழு எண்களாக இல்லாமையையும் அல்லது கிட்டத்தட்ட முழு எண்களாக இருந்தமையையும் மெய்ப்பித்தன. ஆனால், இந்த உண் மைக்கு, அஃதாவது ஐசோடோப்புக்களின் இருப்பிற்கு, ஓர் எளிய விளக்கம் உள்ளது. வேதியியல் முறைப்படி தூய்மை யாக்கப்பெற்ற ஒவ்வொரு தனிமமும் ஐசோடோப்புக்களின் கலவையே (அஃது ஐசோடோப்பினைப் பெற்றிராதவரை). உண்மையில், தனிப்பட்ட ஐ .ே சா ேடா ப் புக் க ளி ன் பொருண்மை - எண்கள் எப்பொழுதுமே கிட்டத்தட்ட முழு எண்களாகவே உள்ளன. ஆணுல், வேதியியற் செயல்கள் ஐசோடோப்புக்களின் கலவையிலுள்ள அணுக்களின் சராசரி பொருண்மையை மட்டிலும் தருகின்றன; இந்தப் பொருண் மையின் அளவு ஐசோடோப்புக்களின் விகித சம அளவினைப் பொறுத்து இருக்கும். ஆகவே, அது முழுமையற்ற சாத்தியப் படக்கூடிய எல்லா மதிப்புக்களையும் மேற்கொள்ளக் கூடும்.