பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அணுக்கரு பெளதிகம் உண்மையில், ஆல்பாக் கதிர்களே வெளியிடும் தனிமங்கள் யாவும் ஆவர்த்த அட்டவணையின் (Periodic table) இறுதி யில்தான் உள்ளன. இதற்கு ரேடியமும் யுரேனியமும் அனைவ ரும் நன்கு அறிந்த எடுத்துக்காட்டுக ளாகும். மூன்று கதிரியக்கக் கோவைகள்: ஆற்றவியலின் விதிகளின்படி ஆல்பாச் சிதைந்தழிவு நேரிடு வதற்குச் சாத்தியப்படக்கூடிய ஓர் அணுக்கரு உடனே அல் லது மிகக் குறுகிய கால அளவில் சிதைந்தழியும் என்று நாம் ஊகிக்க இடந் தருகின்றது. என்ருலும், இஃது அவ்வாறு நடைபெறுவதன்று என்பது யுரேனியம் ஏராளமான அளவு களில் இன்னும் இவ்வுலகில் இருப்பதிலிருந்தும், இந்த யுரேனி யம் உண்மையில் மிக மிக மெதுவாகவே சிதைந்தழிவதிலிருந் தும் மெய்ப்பிக்கப்பெறுகின்றது. உண்மையில், யுரேனியத் தின் அணுக்கள் பல்லாயிர மில்லியன் ஆண்டுகளாக (பல ஆயிர ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாற்றம் அடையாத வடிவில் நிலைத்திருந்திருக்கின்றன. இந்த விதி தோரி யம், ஆக்டினியம் என்ற தனிமங்களுக்கும் பொருந்தும். உண்மையில், ஒரு சில இலேசான தனிமங்களைத் தவிர, நீண்ட - ஆயுளையுடைய இந்த மூன்று கதிரியக்கத் தனிமங் களும் நிலைத்திருந்திராவிட்டால், நீண்டகாலத்திற்கு முன்ப தாகவே கதிரியக்கம் இவ்வுலகினின்றும் மறைந்தே போயிருக் கும். ஏனெனில், இயற்கையில் கிடைக்கும் பிற கதிரியக்கத் தனிமங்களில் பெரும்பாலானவை இவற்றினின்றே தோன்று கின்றன;அவை யாவும் மிகவும் குறுகிய ஆயுளையுடையவை. ஒரு பொருள் சிதைந்தழிதலில் தோன்றும் விளைபொருள்கள் யாவும் தொகுப்பாகக் கதிரியக்கக் கோவை (Radioactiveseries) என்று குறிக்கப்பெறுகின்றன. இயற்கையில் அத் தகைய கோவைகள் மூன்று உள்ளன. அவை: யுரேனியக் கோவை, தோரியக் கோவை, ஆக்டினியக் கோவை என்பன. 1. மில்லியன் என்பது பத்து இலட்சம்; அஃதாவது ஆயிரமாயிரம்,