பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 183 ஆ ல்பாக்கதிர்களை வெளிவிடும் பொருள்களின் அரை வாழ்வு: ஒரு கதிரியக்கப் பொருளின் ஆயுட்காலத்தைக் குறிப்ப தற்கு அரை - வாழ்வு’ (Half-life) என்ற அளவு மேற்கொள் ளப்பெறுகின்றது என்பதை மூன்ரும் சொற்பொழிவில் குறிப்பிட்டோம்; ஒரு பொருளில் தொடக்கத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையில் ஒரு பாதி சிதைந்தழிவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவே அரை - வாழ்வு’ என்பது. ஆல்பாக் கதிர்களை வெளியிடும் பல்வேறு தனிமங்கள் அரை - வாழ்வுக் கால அளவுகளின் தரத்தில் அளவு மீறின வேற்றுமை களைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, யுரேனியத்தின் அரை - வாழ்வு 4500 மில்லியன் ஆண்டுகள்: ஆல்ை, அதன் சேய்த் தனிமங்களில் (Daughter elements) ஒன்ருன ரேடி யம் - 'ே என்ற தனிமத்தின் அரை - வாழ்வு மில்லியனில் ஒரு பங்கு வினடியாகும். இந்த இரண்டு கால எல்லைக்கோடிகளுக் கிடையே நாம் கருதக்கூடிய எல்லா இடைப்பட்ட மதிப்புக் களும் அடங்குகின்றன; எடுத்துக்காட்டாக, ரேடியத்தின் அரை. வாழ்வு 1,580 ஆண்டுகள். இந்த அளவிறந்த வேற்றுமைகளுக்குக் காரணம் யாதாக இருக்கலாம் என்ற விளுவை இஃது எழுப்புகின்றது. . ஆல்பாத்துகள்களின் ஆற்றல் அவற்றை வெளிவிடும் பொருள் - இவற்றிடையுள்ள உறவு முறை: இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியான மெய்ம்மையைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது. அஃதாவது, ஆல் பாத் துகள்களின் ஆற்றலுக்கும் அவற்றை வெளிவிடும் பொருளின் அரை - வாழ்விற்கும் இடையே ஓர் எளிய உறவு முறை அமைந்துள்ளது. இந்த உறவு முறை சிறிது காலத் திற்கு முன்னதாகவே கைகர்”, கட்டால் என்ற இரு அறிஞர் களால் கண்டறியப் பெற்றது. இந்த இரண்டு அறிவியலறி 2, 6pssti - Geiger. 3. ELL–fráv - Nuttall.