பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 187 வோம். இங்கு நாம் காணும் நிலைமைகள் புரோட்டான்நியூட்ரான் உறவில் உள்ள நிலைமைகளைப் போன்றவையே (படம் - 15). அணுக்கருவிலிருந்து ஆல்பாத் துகள் மிகத் தொலைவில் இருக்கும்வரையில், அது தன்னல் விலக்கப் பெற்ற நேர் மின்னூட்டத்தினல் புலத்தின் செயலுக்கு மட்டி லும் முழுவதும் உள்ளாக்கப்பெறுகின்றது. ஆகவே, அதை அணுக்கருவிற்கு அண்மையில் கொண்டு வருவதற்ரு வினை செலுத்தப்பெறுதல் வேண்டும். அஃதாவது நம்முடைய துகள் அணுக்கருவினை அணுகும்பொழுது அதன் நிலையாற்றல் | * * 娜

R í £a (Th 0) o i * r, r? مايو / * படம்-21: பளுவான அணு விற்கும் ஆல்பாத்துகளுக் கும் இடையேயுள்ள மின் அழுத்தத்தைக் காட்டுவது. (Potential energy) முதலில் அதிக்கரிக்கின்றது. ஆனல், அது போதுமான அளவு அணுக்கருவிற்கு நெருங்கி வந்துவிட் டால், குறுகிய வீச்சினையுடைய அணுக்கருவின் கவர்ச்சி விசைகள் செயற்படுகின்றன. இறுதியாக அவை மின் விலக்கு விசையை அடக்கியாள்கின்றன. ஒரு குறிப்பிட்ட 'மின் அழுத்த அரண் (Potential barrier) கடந்தபிறகு, விலக்கு விசை கவர்ச்சி விசையாக மாறுகின்றது; அதிலிருந்து நிலை யாற்றல் அணுக்கருவின் உட்புறத்தை நோக்கி அதிகமாகக்