பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 6 அணுக்கரு பெளதிகம் ஆல்பாக் கதிர்களை வெளிவிடும் தனிமங்களின் பண்புகளை விளக்குவதற்கு நாம் பயன்படுத்திய அதே காரணங்களைக் கொண்டு பீட்டாக்கதிர் வீசலுக்கும் விளக்கம் தருதல் இயலாது; அஃதாவது, எலக்ட்ரான்களை வெளிவிடும் தனி மங்களுக்கு இக்காரணங்கள் பொருந்தா. காரணம் என்ன வெனில், ஒவ்வொரு எலக்ட்ரானும் எதிர்மின்னுாட்டத்தைப் பெற்றுள்ளது. ஆகவே, அஃது அணுக்கருவிற்கு வெளியி விருக்கும்பொழுது, அதனுல் கவரப்பெறுகின்றது. எனவே, இதில் மின் அழுத்த அரண்' என்பது இல்லை. எனினும், எலக்ட்ரான்களை வெளிவிடும் தனிமங்களுக்கும் பாசிட்ரான் களை வெளிவிடும் தனிமங்களுக்கும் சிறப்பான வேற்றுமை யொன்றும் இல்லாததால், பாசிட்ரான்களை வெளிவிடும் தனி மங்களுக்கும் எலக்ட்ரான்களை வெளிவிடும் தனிமங்களுக்கும் இடையே ஓர் ஒப்புடைமை இருப்பதாக நாம் கருத் முடி யாது. மேலும், இன்னேர் மெய்ம்மையும் உள்ளது: அஃதா வது,எலக்ட்ரான்களும் பாசிட்ரான்களும் தம்முடன் ஒருங்கே வெளிவரும் நியூட்ரிளுேக்களுடன் சேர்ந்து ஆல்பாத் துகள் போல, அணுக்கருவின் முழுப் பகுதிகளாக அமைவதில்லை. ஆனல், அணுக்கரு உருமாற்ற்ம் உண்மையில் நிகழும் பொழுதுதான், அவை அணுக்கருப்புலத்திலிருந்துஉண்டாக்கப் பெறுகின்றன. அணுக்கருவின் புறத்தமைப்பிலிருந்து வெளிவிடப்பெறும் ஃபோட்டான்களோடு கூடிய ஒர் ஒப் புடைமை இஃதுடன் காரணகாரிய முறையில் பொருந்த கூடும் எனத் தோன்றுகின்றது. அனுபவத்தில், பீட்டாக்கதிர்களை வெளிவிடும் தனிமங் களின் சிதைந்தழியும் ஏற்படு நிலையும் பீட்டாத்துகள்களின் ஆற்றலுக்கேற்றவாறு அதிகரிக்கின்றது என்பது பொதுவான உண்மையாக உள்ளது. ஒவ்வொரு எலக்ட்ரானும் பாசிட் ரானும் நியூட்ரினேவுடன் சேர்ந்தே வெளி வருகின்றது என் பதை நினைவில் இருத்தல் வேண்டும்; ஏற்கெனவே குறிப்பிட் புதுபோல, இயக்கம் அல்லது சிதைந்தழியும் ஆற்றல் புள்ளி விவர இயல் விதிகளின் ul; Statistical laws) @∨,&ér