பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 303 வித மாற்றத்திலும் பங்கு பெறுவதில்லை. அளவுக்கு அதிக மான நியூட்ரான்கள் தன்னுள் இருக்கும் காரணத்தால் இயக்கத்தின் காரணமாக உண்டான அணுக்கரு நிலையற்றதாக இருக்கும்பொழுது மட்டிலுமே அதன் வேதியியற் பண்புகள் மாறுகின்றன. இந்நிலையில், அடுத்தபடியாகச் செயல் நடை பெறுகின்றது; இதில் ஒரு நியூட்ரான் ஒர் எலக்ட்ரானை வெளியிட்டுப் புரோட்டாகை மாறுகின்றது; அணுக்கருவும் அணு எண் - ஒன்று அதிகமுள்ள தனிமத்தின் அணுக்கருவாக மாறிவிடுகின்றது. - ஒரு நியூட்ரான் ஒர் அணுக்கருவைத் தடையின்றி அணுகக்கூடுமாதலால், இச்செயலில் மின்னுாட்டம் பெற்ற துகளினைப் போலன்றி நேர்வேகம் முக்கிய பங்கினைப் பெறுவ தில்லை. இதற்கு மாருக, மெதுவாகவுள்ள நியூட்ரான்களே விரைவான நியூட்ரான்களைவிட மிகவும் பயன் விளைவிப்பவை களாக உள்ளன; காரணம், அவை அதிக நேரம் அணுக் கருவின் அருகே தங்குகின்றன. ஆகவே, அணுக்கருவால் அவை சிறையீடு செய்யப்பெறுதலின் ஏற்படுநிலை விரை வான நியூட்ரான்களின் ஏற்படுநிலையைவிட அதிகமாக உள்ளது. நியூட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட, ஆளுல் மிக அதிகமில்லாத, ஆற்றலுடன் இருக்கும் பொழுதுதான் இந்த ஏற்படுநிலை மிகமிக அதிகமாக இருக்கக்கூடும் என்பதைச் சோதனைகள் காட்டியுள்ளன. பெதேயின்" கொள்கைப்படி நியூட்ரானை நாம் அலேக்கூறில், அஃதாவது, அணுக்கரு வில் படும் ஒர் அலேயாகக் கருதும்பொழுதுதான், இது காரண காரிய முறையில் அமைகின்றது. அணுக்கரு என்பது அதிர்வு அடையக்கூடிய ஓர் அமைப்பு ஆகும்; ஆகவே அது தன்னைத் தாக்கும் எந்த அலேயுடனும் அந்த அலேயின் அதிர்வுஎண் தன்னுடைய அடிப்படை அதிர்வு-எண்களில் ஒன்று டன் பொருந்தும்பொழுது அது - நாதத்தில் (Resonance) ஈடுபடுகின்றது. இதில் அலேயின் மிக வன்மையான தேர்ந் 16 , GuĜ45 - Bethe. அ- 14