பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு இயக்கங்கள் 275 அந்த அதிர்வு அதிகரிக்குமாறு செய்து இறுதியில் அணுக் கருவினை பிளவுறவும் செய்துவிடுகின்றது. - பிளவுறுதல் பல்வேறு முறைகளில் நிகழ்தல்: இந்த அணுக்கருவின் பிளவுறுதல் பல்வேறு முறைகளில் நிகழலாம். பொதுவாக, இரண்டு சில்லுகளும் சமப் பருமன் உள்ளனவாக இல்லை. எடுத்துக்காட்டாக, அரிதாகவுள்ள யுரேனிய ஐசோடோப்பு (U*) ஒரு நியூட்ரானை விழுங்கு கின்றபொழுது அஃது ஒரு ஸ்ட்ரான்ஷிய அணுவாகவும், (Sr") ஒரு ஜெஞன் (Xe) அணுவாகவும், இரண்டு நியூட் ரான்களாகவும் பிளவுறலாம். இந்த நிகழ்ச்சியினை, ,Uនេះ 十 on’ سجس۔ „Sroo -- „Хе“ 十 on' -- on” என்ற வாய்பாடு விளக்குகின்றது. இதிலும் இயல்பாகவே பொருண்மை-எண்களின் மொத் தத் தொகைகள் அம்புக்குறிக்கு இருபுறங்களிலும் சமமாக இருத்தல் வேண்டும்; அங்ஙனமே, மின்னுரட்ட எண்களும் ஒன்றற்கொன்று சமமாகிவிட வேண்டும். எனினும், இவ்வாறு குறிப்பிட்ட விளைவுகளை உண்டாக்கு வதற்குப் பதிலாக, இந்த யுரேனிய அணுவின் அணுக்கருப் பிளவு, எடுத்துக்காட்டாக பின்னவற்றிலிருந்து ஸ்ட்ரான்ஷிய அணுவையும் (Sr') ஜெனன் அணுவையும்(Xe") இரண்டு நியூட்ரான்களுடன் உண்டாக்கலாம்; அல்லது வெவ்வேறு இரண்டு தனிமங்களின் அணுக்களையும், வெவ்வேறு எண்ணிக் கையில் நியூட்ரான்களையும் உண்டாக்கவும் செய்யலாம். உண்மையில், இத்தகைய பிளவுறுதல்களில் மிக அதிகமான எண்ணிக்கையுள்ள வெவ்வேறு தனிமங்கள் உண்டாதல் காணப்பெற்றுள்ளது. யுரேனிய அணுக்கரு உடையும் (பிளவுறுதல் நிகழும்) நுட்பமான முறை ஒரளவு தற்செய லாகத்தாள் உண்டாகின்றது.