பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அணுக்கரு பெளதிகம் நிலை மின்காட்டியினின்றும் காப்பிடப் (Insulated) பெற்றுள் ளது மின்னூட்டமடைந்த துகளொன்று-ஆல்பாத் துகள் பீட்டாரத்துகள் அல்லது காமா கதிர்ஃபோட்டான்-நிலைமின் காட்டிக்கும் மூடிக்கும் இடையேயுள்ள இடத்தில் நுழையும் பொழுது, அது காற்று மூலக்கூறுகளினின்றும் எலக்ட்ரான் களைக் கிழித்தெறிந்து விடுகின்றது. இந்த எலக்ரான்கள் வேறு மூலக்கூறுகளுடன் சேர்ந்து எதிர்மின்னூட்ட அயனிக ளாகின்றன: எலக்ட்ரான்களை இழந்த மூலக்கூறுகள் நேர் மின்னூட்டம் பெற்ற அயனிகளாகப் பின்தங்குகின்றன. படம் 29-இல் காட்டப்பெற்றுள்ளவாறு, அத்தகைய அயனி கள் துகளின் பாதையிலெல்லாம் உண்டாக்கப்பெறுகின்றன. ༽དམངས་ལ་ Électros படம்-29: அயனியாதல் அறையின் தத்துவத்தை - விளக்குவது. மூடி நேர்மின்னூட்டம் பெற்ருல், நேர்மின்னூட்டம் பெற்ற அயனிகள் நிலைமின்காட்டியின் கோலுக்கும் எதிர்மின்னூட் ரும்பெற்ற அயனிகள் மூடிக்குமாகப் பீறிட்டுப் பாய்கின்றன. இவ்வாறு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்று அதன் இதழ்கள் பிரிந்து நிற்கின்றன. ஆயினும், வளர்ச்சியடையாத நிலையிலுள்ள இந்தக் கருவி தனிப்பட்ட துகள்களை உற்ற றிந்து காண்பதற்கேற்றவாறு நுட்பமாக அமையவில்லை. súD isterioraf (String electrometer) Glarsi Ap Geirsyth usts