பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிக ஆய்கருவிகள் 露2務 நுட்பமான கருவி வலிவற்ற கதிர்வீசலைப் பதிவு செய்யக் கூடியதாயினும், தனிப்பட்ட துகள்களைப் பதிவு செய்ய இய லாது. ஒரு குறிப்பிட்ட அணுக்கரு-பெளதிகச் செயலுக்கேற்ற வாறு குறைந்த மின்னூட்டங்களே உற்றறிந்து காணும் முறை பல்வேறு வழிகளிலும் வகைகளிலும் சீர்பெறச் செய்யப் பெற்றுள்ளது. கைகர் காட்டு எண் கருவி: தனிப்பட்ட துகள்களைத் உற்றறிந்து காண்பதில் பொதுவாக முதன் முதலாகக் கண்டறியப்பெற்ற கருவி கைகளின் காட்டு எண்-கருவி யாகும் (படம்-30). 77 έρρήτο- 2 皺"貓■/ <ණූ 須 ബജ്ജ്. 须 ~10%2

  • Midoko

2 £ar#h படம்-30: முள்ளுடன் கூடிய எண்-கருவியினைக் காட்டுவது (கைகர் கண்டவாறு) அடிப்படையில் அக்கருவி மிகவும் நன்ருகச் சீர்பெற்ற அயனி உண்டாகும் அறையேயாகும். இந்தக் கருவியில் ஒர் உலோகக் கோல் மிகக் கூரிய நிலையிலுள்ளது; அறை சாதாரணமாக ஓர் உயர்ந்த மின் அழுத்தம் பெறுகின்றது; இதனால் அந்தக் கோலின் கூர்மையான நுனியருகில் ஒரு மின் புலம் (Electric field) உண்டாக்கப்பெறுகின்றது. ஒரு மின் னுட்டம் பெற்ற துகள் அல்லது காமாக்கதிர் ஃபோட்டான் பறந்து சென்று அங்கு எலக்ட்ரான்களே விடுவிக்கும் பொழுது விடுவிக்கப்பெற்ற எலக்ட்ரான்கள் தீவிரமான புலத்தினுல் மிக வன்மையாக முடுக்கப்பெறுகின்றன; இதனுல் அவை அ-15