பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感52 அணுக்கரு பெளதிகம் அதிகமான காலம் வேண்டும். எனினும், முகில் அறையை மிகத்திறனுடன் எண் - கருவியுடன் இணைத்து இச்சங்கடம் நீக்கப்பெறுகின்றது: எண் - கருவி முகில் அறையின் நுழை வாயிலில் ஒரு காவற்காரன்போல் செயல்புரிகின்றது. முகில் அறையில் நாம் உற்று நோக்க விழையும் சிறப்பான நிகழ்ச்சி யுடன் செயற்படுவதற்கேற்றவாறு எண் . கருவி சரி செய் யப்பெறுகின்றது. அத்தகையதொரு நிகழ்ச்சி உண்மையில் நடைபெற்ருல், எண் - கருவி ஒரு பெருக்கியின் மூலம் பெருக்கத்தை விளைவிக்கின்றது. முகில் அறையில் உண்டா கும் அயனிகள் துகள்களின் பாதைகளினின்றும்வாயு பரவுதல் மூலம் பிரிந்து செல்லாத அளவுக்கு இது மிக வேகமாக நடைபெறுகின்றது. ஆகவே, அவை முகிற் சுவடுகளாகக் கண்ணுக்குப் புலனுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் அண்டகதிர்வீசலின் இயல்பைப்பற்றிய சில முக்கியமான எடுகோள்களை (Data) இந்த முறைதான் நல்கியுள்ளது. இறுதியாக, ஒளிப்படத்தட்டும் மின்னூட்டம் பெற்ற துகள்களின் உற்றறியும் கருவியாகப் பயன்படுத்தப்பெற லாம். ஏற்ககெனவே படம் - 25இல் ஓர் எடுத்துக்காட்டு காட்டப் பெற்றுள்ளது. நியூட்ரான்களை உற்றறியும் பிரச்சினை: இந்த முறைகள் ஒவ்வொரு கதிர்வீசலையும் (ஆல்பாக் கதிர்வீசல், பீட்டாக் கதிர்வீசல், மின்னூட்டத்தைச் சுமந்து செல்லும் எல்லாவகை அணுக்கருச் சிதைப்பொருள்கள் ஆகியவை) காமக்கதிர் ஃபோட்டான்களையும் கணக்கிட்டுக் காண்பதற்கோ, உற்றறிவதற்கோ நமக்குத் துணைபுரிகின்றன: ஆகவே, நியூட்ரான்களை உற்றறியும் பிரச்சினைமட்டிலுந் தான் இன்னும் விளக்கப்பெருமல் உள்ளது. நியூட்ரான்கள் மின்னுாட்டத்தினைச் சுமந்து செல்லாததால், அவை தாமாக அயனிகளை உண்டாக்கிக் கொள்வதில்லை; ஆகவே, நாம் அவற்றின் இருப்பை உற்றறிந்து காண்பதற்கு ஒர் இடைநிலை