பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 அணுக்கரு பெளதிகம் ஒரு நல்ல சிறப்புக்கூறு-குறிப்பிடத்தக்கது: உண்டாக்கு வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மிகவும் சிரமமாகவுள்ள உயர் மின் அழுத்தத்தை இக்கருவி அடியோடு நீக்கி விடு கின்றது, சைக்ளோட்ரானின் இன்றியமையாத பகுதி அதி லுள்ள மிகப்பெரிய மின்-காந்தமாகும்: அக் காந்தம் தனது இரு துருவத் துண்டுகளுக்கும் இடையில் வன்மை வாய்ந்த, மிகவும் ஒருபடித்தானதும் விரிந்ததுவுமான 10,000, SS - 口 ಬ್ರಿ: елсу generator படம்-37: சைக்ளோட்ரானை விளக்குவது. லிருந்து 15,000 ஒயர்ஸ்டெட்டு (Oersteds) அளவுகள் காந்தப் புலத்தை உண்டாக்குகின்றது. துருவத் துண்டுகள் ஒன்றற் கொன்று மிகவும் அருகிலிருக்குமாறு வைக்கப்பெற்றுன்ளன: அவற்றிற்கிடையிலுள்ள இடமும் மிக நன்ருக வெற்றிட மாக்கப் பெற்றுள்ளது. இயங்கும் நிலையிலுள்ள ஒருதுகள் அத்தகைய ஒரு புலத்தினுள் நுழையுங்கால்,அஃது ஒரு வட்ட வடிவமான பாதையில் செல்லுகின்றது. அப்பாதை